https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா(க்களே)!!
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
உங்களுக்கு என்ன நடக்கிறது? ஏன் நீங்கள் முட்டாள் தனமான முடிவுகளை திடீர் திடீரென்று எடுத்து அதை நடைமுறைப்படுத்தும்படி எங்களுக்கு அறிவு...



உங்களுக்கு என்ன நடக்கிறது? ஏன் நீங்கள் முட்டாள் தனமான முடிவுகளை திடீர் திடீரென்று எடுத்து அதை நடைமுறைப்படுத்தும்படி எங்களுக்கு அறிவுரை கூறுகிறீர்கள்?
பாதுகாப்புச்செயலாளர், பொதுபலசென செயலாளர் கூப்பிடுவதற்கெல்லாம் ஓடோடிப்போய் கையை கட்டிக்கொண்டு அவர்கள் சொல்வதை அல்லது கட்டளையிடுவதை அப்படியே எங்களுக்கு கூறி அதன்படி நடக்கும்படி கூறுகிறீர்களே??
உங்களுக்கு வெட்கமாக, கேவலமாக படவில்லையா? இந்த உலமா சபை உங்கள் அமைப்பு இஸ்லாமிய அடிப்படையில் எத்தகு பெறுமதி வாய்ந்தது, கண்ணியமிக்கது என்பதை நீங்கள் உணரவில்லையா?
மார்க்கத்தீர்ப்புகளை அல்லாஹ்வின் கட்டளைகளின் அடிப்படையிலும், நமது உயிரினிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் நபிகளாரின் போதனை, வழிகாட்டல்களின் அடிப்படையிலும் வழங்ககூடிய சக்திவாய்ந்த அமைப்பை அந்நிய ……மத்தியில் ஏன் இவ்வளவு கேவலமாக்குகிறீர்கள்?
இந்த கண்ணியமிக்க சபைக்கு நீங்கள் தகுதியில்லை என்பதை (உங்கள் கோழைத்தனத்தாலும், ……………, அரசியல்தனத்தாலும்) பலதடவைகள் நிருபித்துவிட்டதால் அம்மேன்மைமிக்க சபையிலிருந்து நீங்கள் உடனே வெளியேறுங்கள்!!
உங்களைவிட பன்மடங்கு மார்க்க அறிவும், உலகஅறிவும், தைரியமும், விவேகமும், தலைமைத்துவ ஆளுமையுமுள்ள பல உலமாக்களும், மார்க்க அறிஞர்களும், வெளியில் உங்கள் செயற்பாடுகளால் சலிப்படைந்தவர்களாக, ஆனால் ……………. மக்களிடம் உங்களை காட்டிக்கொடுக்க முடியாதவர்களாக உள்ளனர். எனவே இனியும் முட்டாள் அரசியல் செய்யாமல் ஒதுங்குங்கள்!!
இப்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை, இனியும் இல்லை என்றா நீங்கள் கருதுகிறீர்கள்? அதனாலேயா குனூத் ஓதவேண்டாம் என்று கூறுகிறீர்கள்? அல்லது அவர்கள் அவ்வாறு உங்களுக்கு ஏதும் (வெளியில் எதுவும் சொல்லவேண்டாம் என கூறி) உத்தரவாதம் தந்தார்களா?
அப்படியாயின், அவர்களது ஏற்கனவே தரப்பட்ட எத்தனை உத்தரவாதங்கள் நிறைவேற்றப்பட்டன? இவை ஒன்றும் உங்களுக்கு இதுவரை தெரியாதா? அல்லது அவர்கள் உங்களை பயமுறுத்தினார்களா? நீங்கள் பயந்துவிட்டீர்களா?
அப்படியாயின் நீங்கள் விரும்பியபடி முடிவெடுக்கவோ, அவர்கள் முடிவெடுக்கவோ தற்போதுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளா??
நான், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்: |
சிங்கள பௌத்தர்களுக்கு அஸ்கிரிய, மகாசங்க தேரர்கள் இருப்பதுபோல்தானே முஸ்லிம்களாகிய எங்களுக்கு உலமாக்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் எப்போதாவது இந்த பாதுகாப்புச்செயலாளரோ அல்லது ஜனாதிபதியோ அவர்களை இவர்கள் காலடிக்கு அடிக்கடி அழைத்து அறிவுரை வழங்கியிருப்பார்களா??
மாறாக இந்த செயலாளரும், ஜனாதிபதியும்தானே அந்த தேரர்கள் காலடிக்கு சென்று அவர்களை (அடிமைகள்போல்) காலைத்தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்று, அவர்களின் அறிவுரைகளை தங்கள் சட்டங்களாக நடைமுறைப்படுத்துகிறார்கள். அவ்வாறு “மதத்தை” கொண்ட அவர்களுக்கு அவ்வளவு கௌரவம் என்றால் “மார்க்கத்தை” கொண்ட எங்களுக்கு எவ்வளவு கண்ணியம் கிடைக்கவேண்டும்??
நான் நினைக்கிறேன், நீங்கள் எப்போது அவர்களுக்காக தெருவுக்கும், ஜெனிவாவுக்கும் ( …………..) சென்றீர்களோ அன்றே அவர்கள் உங்கள் இல்லை இந்த கண்ணியமிக்க உலமா சபையை வெறும் காற்பந்தாக இனங்கண்டுவிட்டார்கள். இதற்கு நீங்கள் நிச்சயம், பதில் சொல்லியாகவேண்டும்.
இது எனது குரல் அல்லது ஏக்கம் மட்டுமோ இல்லை, மாறாக அனைத்து, அல்லது மிகமிக அதிகமான முஸ்லிம்களின் குரலாகவும் ஏக்கமாகவுமே நான் கருதுகிறேன்.
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1

Advertisement

Post a Comment

 
Top