https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: இவர் தானா உலமா சபைத் தலைவர்? சிந்தியுங்கள் முஸ்லிம்களே....
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
அன்று ரிஸ்வி முப்தி லண்டனில் - அளுத்கமை முஸ்லிம்கள் நெருப்பில் எரிந்தன ... இலங்கையின் அளுத்கமை பேருவளை, களுத்துறை, வெட்டுமங்கடை, தெ...



அன்று ரிஸ்வி முப்தி லண்டனில் - அளுத்கமை முஸ்லிம்கள் நெருப்பில் எரிந்தன ...
இலங்கையின் அளுத்கமை பேருவளை, களுத்துறை, வெட்டுமங்கடை, தெஹிவளை, பதுளை போன்ற பல முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்படுகின்றன . பள்ளிவாசல்கள் தீவைக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதுவரை பல முஸ்லிம்கள், சிங்கள பெளத்த இனவாதிகளால் கொல்லப் பட்டுள்ளனர், நூற்றுக்கணக்கானோர்
காயமடைந்துள்ளனர், பல பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப் பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப் பட்டுள்ளனர்.
சிங்கள பெளத்த இனவாதிகளால் திட்டமிட்டு செயற்படுத்தப் பட்டுள்ள இந்த இனக்கலவரம் குறித்து நிறைய முஸ்லிம் ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை அன்று முதல் இன்று வரை வெளியிட்டு வருகின்றன. ஆகவே அந்த விபரங்களை மீண்டும் இங்கே பதியத் தேவையில்லை.
அன்று அரசாங்க ஆதரவு இந்த வன்முறைக்கு உள்ளது என்பது தெளிவு. அன்று ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச நாட்டில் இல்லாத நேரமே இந்த தாக்குதல்களுக்கு தெரிவு செய்யப் பட்டன ஜனாதிபதி, முக்கிய அமைச்சர்கள் நாட்டில் இல்லாத நேரத்தில், இது நன்கு திட்டமிடப்பட்டு, முன்னேற்பாட்டுடனேயே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் மேற்கொள்ளப் பட்டன ..
இதில் முக்கிய கேள்வி, ஜமியத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி அன்று ஏன் லண்டன் சென்றார் என்பதாகும்.
இலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்படும் பொழுது, தானும் நாட்டில் இருக்கக் கூடாது என்கின்ற முன்னேற்பாட்டின் அடிப்படையிலேயே ரிஸ்வி முப்தி நாட்டில் இருந்து வெளியேறி லண்டன் சென்றுள்ளதாக அறிய முடிந்தது
ஜமியத்துல் உலமா என்ற பெயரில் ஹலால் சான்றிதழ் வியாபாரம் என்று ஆரம்பித்து செலிங்கோ நிறுவனத்திற்குக் கூட ஹலால் சான்றிதழ் வழங்கி, அதில் கோடி கோடியாக முஸ்லிம்களின் பணத்தை கொள்ளை அடிப்பதில் தனது துரோகத்தை ஆரம்பித்த ரிஸ்வி முப்தி தலைமையிலான உலமா சபை, தம்புள்ளை பள்ளிவாசல், மகியங்கனை பள்ளிவாசல், அனுராதபுரம் மல்வத்தை பள்ளிவாசல், நோன்புப் பெருநாள் பிறை என்று எல்லா விடயங்களிலும் நாட்டு முஸ்லிம்களுக்கு தொடர்ந்து துரோகமே செய்தன ..
இந்த நிலையில், இலங்கை முஸ்லிம்கள் தாக்கப்படப் போவதை முன்கூட்டியே ரிஸ்வி முப்தி அறிந்திருந்தாரா என்கின்ற கேள்வி எழுகின்றது.
லண்டனில் இருந்து ஷேய்க் ரிஸ்வி முப்தி வழங்கியுள்ள அரிவுரையில், அளுத்கமை முஸ்லிம்களை வீடுகளில் இருக்குமாறு கூறியுள்ளார். வீடுகளுக்குள் புகுந்து தாக்கி, வீடுகளுக்கும் தீ வைக்கப்படுகின்றது என்பது இவருக்குத் தெரியாதா?
அல்லது, முஸ்லிம்கள் வீட்டுடன் சேர்ந்து ஒட்டு மொத்தமாக எரிந்து நாசமாகட்டும் என்கின்ற ஆசையா?
இவர் தானா உலமா சபைத் தலைவர்? சிந்தியுங்கள் முஸ்லிம்களே....
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1

Advertisement

Post a Comment

 
Top