துனீசியாவில் வன்முறையை போதிப்பதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள 80 பள்ளிவாசல்களை மூடிவிடவுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
துனீசியாவின் சுற்றுலா மையம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கித் தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்ட சம்பத்தை அடுத்தே இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பியர்கள். துப்பாக்கிச்சூட்டை நடத்தியவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வெளியில் இயங்கும் குறித்த பள்ளிவாசல்கள் ஒருவார காலத்தில் மூடப்படும் என்று துனீசியாவின் பிரதமர் ஹபீப் எஸ்ஸித் கூறினார்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் உரிமைகோரியிருந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பெருமளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டிலிருந்து வெளியேறிவருவதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
நாட்டின் சுற்றுலா மையங்கள் எங்கிலும் அரசாங்கம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
Post a Comment