https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: வளைகுடா நாட்டு "ஹவுஸ் டிரைவர்"..... (வீட்டு டிரைவர் ).
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
வளைகுடா நாட்டு "ஹவுஸ் டிரைவர்"..... (வீட்டு டிரைவர் ). ரொம்ப நாளா இவங்கள பத்தி ஒரு பதிவு எழுதனுமுன்னு நினைத்தேன் .இப்பொழுது தான்...


வளைகுடா நாட்டு "ஹவுஸ் டிரைவர்".....
(வீட்டு டிரைவர் ).

ரொம்ப நாளா இவங்கள பத்தி ஒரு பதிவு எழுதனுமுன்னு நினைத்தேன் .இப்பொழுது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது .பொதுவாக எல்லா வேலையிலும் ஒரு கஷ்டம் இருக்கும் ஆனால் கஷ்டத்தோடு சேர்த்து சங்கடமும் உள்ள வேலைதான் இந்த ஹவுஸ் டிரைவர் வேலை

1- அவர்களுக்கான சாப்பாட்டு நேரத்தை அவர்கள் தீர்மானிக்க முடியாது அதை அவர்கள் வீட்டு முதலாளிதான் தீர்மானிக்க வேண்டும் .

2-கவலையை மறந்து நிம்மதியாக தூங்க முடியாது எந்த நேரத்தில் முதலாளி கூப்பிட்டாலும் செல்ல வேண்டும் .

3- ரம்ஜானும் ,பக்ரீத்தும் வரும்போது நம்ம எல்லாம் நம்ம நண்பர்கள் ரூம்ல போய் பல விதமான சாப்பாடு சாப்ட்டு அங்க அரட்டை அடுச்சு அன்றைய தினத்தை கழிப்போம் ஆனால் அவர்களுக்கு அன்றைய தினம்தான் அதிக வேலை இருக்கும் .

4-அவர்களுக்காக குடுக்கப்பட்ட படுக்கைஅறையின் அளவோ மிகச்சிறியது அதற்குள்ளே கிச்சனும் ,பாத்ரூமும் ,அடங்கிவிடும் 3பேர் சேர்ந்து உக்காந்து சாப்பிட கூட முடியாது .

5-ஊரில் எந்த பிரச்சினை இருந்தாலும் அவர்களுக்கான விடுமுறை மாதம் இங்கு மதரசா (பள்ளிகூடங்கள் )விடுமுறை விடும் மாதங்கள் மட்டுமே .

6-நமக்கு எதுவும் மனக்கஷ்டம் வந்தால் நமக்கு அதை உடனே மற்றவர்களிடம் பறிமாற சந்தர்ப்பம் உண்டு ஆனால் அவர்கள் சங்கடம் வந்தாலும் ,சந்தோஷம் வந்தாலும் தானே சிரித்து,தானே சங்கடபட வேண்டும் .

7-அவர்களுக்கு கிடைக்கும் அந்த 2மாத விடுமுறை கொண்டு குடும்பத்தாரின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் .

8-எவ்வளவு தான் பட்ஜெட் போட்டுபணத்த சேமிச்சு வச்சாலும் ஊருக்கு போகும் போது நண்பர்கள் கிட்ட கடன் வாங்கிட்டு போறது .

9-25வயசுல வேலைக்கு வந்து தனது ஆயுளை (50வயசுவரை) கழிப்பவர்

10-அவர்கள் ஓட்டும் கார்களின் நிறங்களும் ,உருவங்களும் மாறிக்கொண்டே இருக்கும் ...ஆனால் பலரின் வாழ்க்கைத்தரம் மாறுவதே இல்லை .

இன்னும் பல......

"அவர்களுக்கு எனது கம்பீரமான சல்யூட்" . .

இதில் 100ல் 95%....இந்த பதிவு பொறுந்தும் . —

எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1

Advertisement

Post a Comment

 
Top