
வானொலியிள் நடக்கும் கூத்து .
Mohammed Safran
இன்றைய காலகட்டத்தில் வானொலிகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதில் எமது பெண்கள் தங்களுக்குள்ளேயே போட்டிபோட்டுக் கொள்கிறார்கள்.
படிக்கிறோம் என்ற தோரணையில் , நடுநிசியில் வானொலிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும் மாணவிகள் , “ என்னை விரும்புவோருக்காகவும் ' பாடல் தாருங்கள் என்று கேட்கிறாள் . அத்துடன் ` உங்களுடைய குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது . நீங்கள் அழகாக பேசுகிறீர்கள் ' என்ற வர்ணனை வேறு . இந்த கூத்துகள் நடைபெறும் போது பெற்றோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றனர்.
இந்த தொடர்பாடல் காலப்போக்கில் வானொலி அறிவிப்பாளரின் கய்யடக்க தொலைபேசியுடன் பேசுமளவுக்கு வளர்கிறது. எஸ்.எம்.எஸ். உடன் தொடங்கி இரவில் பாலியல் ரீதியாக பேசுவது வரை வளர்ந்து செல்கிறது படிப்படியாக இந்த உறவு விரிவடைந்து இவர்கள் நேரடியாக சந்திக்கின்றனர். அவனும் இவளை தனக்கு இரையாக்கிவிட்டு கைகழுவிட்டுச் செல்கிறான்.
எமது மாணவிகள் இவ்வாறு சீரழிந்து செல்வது ஒரு புறமிருக்க , திருமணம் முடித்த பின்னர் கணவர் வெளிநாட்டுக்கு சென்றால் , மனைவி தனது இச்சைகளை தெரிவிப்பதற்கு வானொலி அறிவிப்பாளர்களை நாடும் மிகவும் கேவலமான நிலைமையும் இன்று முஸ்லிம் சமுகத்திற்குள் ஏற்பட்டுள்ளது.
இதில் அதிர்ச்சிகரமான விடயம் யாதெனில் , தனது மகளின் வயதையொத்த ஒரு அறிவிப்பாளரிடம் ஒரு பெண் தனது பாலியல் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கு முனைகிறார். கணவர் வெளிநாடு சென்று அங்கு கஷ்டப்பட்டுகிறார். மணைவியோ இங்கு வானொலி அறிவிப்பாளருடன் கூத்தாடிக்கிறார்.
மனைவியை விட்டுவிட்டு வெளிநாடு சென்ற கணவனும் , தனது உணர்ச்சியை அடக்குவதற்கு திறாணியில்லாத மனைவியும் மறுமையில் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1
Post a Comment