https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: உன் முகம் காட்ட உனக்கு மனமில்லையா ?
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
கேட்பதை கேட்டு விட்டேன் கொடுப்பது உன் இஷ்டம் இனி எதுவும் கேட்காது என் உள்ளம் நல்லதோ கேட்டதோ இனி எல்லாம் அவன் செயல் சொல்லுவதெ...


கேட்பதை கேட்டு விட்டேன்
கொடுப்பது உன் இஷ்டம்
இனி எதுவும் கேட்காது என் உள்ளம்
நல்லதோ கேட்டதோ
இனி எல்லாம் அவன் செயல்
சொல்லுவதெல்லாம் சொல்லி விட்டேன்
இனி சொல்லுவதுக்கு ஒன்றும் இல்லை .
உன் முகம் காட்ட உனக்கு மனமில்லையா ?
உன் அழகு குறைந்துவிடும் என்ற பயம்மா ?
என் பாசம் குழைத்துவிடும் என்ற பயமா ?
உன் உயிருக்குள் இருக்கும் என்னை
தட்டியெழுப்ப, உனக்கேன் மனமில்லை ?
உண்மையை சொல்லுகிறாய் ,
உள்ளதை சொல்லுகிறாய் .
என்னையும், நம்பவைத்து ஏமாற்றுகிறாய்!
உண்மையைச் சொல்லிவிடு,
உனக்கும் எனக்கும் இனி என்ன பேச்சு ?
உன்னைத் தோண்டிப் பார்....
உன் உயிரோடு உயிராக உறைந்துவிட்ட
என்னைத் தெரியும்!!
உறங்கியதெல்லாம் போதும்,
உள்ளத்துச் சங்கிலியை
உடைத்தெறிந்து வந்துவிடு.....
நம் உள்ளத்துக் காதல், - உன்
சின்னச் சின்ன செய்கையால்
வலுப்பெறட்டும்!
உன் உறவுக்கான என் காத்திருப்பு,
அந்த நிமிடங்களில்
முழுமையாய், முற்றுப் பெறட்டும்....
என் உள்ளங்கைகளில் முகமேந்திக்கொள்ளும்
உன் வருகை நிகழத்தான் வேண்டும், 

Mohammed Safran

Advertisement

Post a Comment

 
Top