ஏர் ஏசியா விமானத்தின் மேலும் இரண்டு பெரிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடலில் விழுந்த ஏர்ஏசியா QZ8501 விமானத்தின் இரண்டு பெரிய பாகங்கள் தேடுதல் பணியில் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனேஷிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேடல் மற்றும் மீட்பு நிறுவனத் தலைவர் பாம்பாங் சொலிஸ்ட்யோ கூறுகையில், ரோவ் எனப்படும் ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் கடலுக்குள் சென்று படங்களை எடுத்து வருகிறது.
இந்த வாகனம் கடலுக்கடியில் இரண்டு பெரிய பாகங்கள் கிடப்பதை படம்பிடித்துள்ளது என்றும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு பொருட்களும் சுமார் 10 மீற்றர் நீளம் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
ஆனால், கடலில் நிலவும் வலுவான நீரோட்டங்கள் நீருக்கடியில் வாகனத்தை இயக்க முடியாமல் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment