smile picker smile picker Author
Title: கென்யாவில் பள்ளிவாயல்களுக்குப் பூட்டு
Author: smile picker
Rating 5 of 5 Des:
கென்யா பொலிஸார் மொம்பாசா நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களுக்கு பூட்டு போட்டு பலவந்தமாக மூடியுள்ளதாகவும், இதனால், அங்குள்ள பள்ளிவாயல்கள் ...
கென்யா பொலிஸார் மொம்பாசா நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களுக்கு பூட்டு போட்டு பலவந்தமாக மூடியுள்ளதாகவும், இதனால், அங்குள்ள பள்ளிவாயல்கள் வெறிச்சோடிப் போயுள்ளதாகவும், குறித்த பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம், கனரக ஆயுதந்தாங்கிய துணை பொலிஸ் பிரிவினர் மொம்பாசா நகரில் அமைந்துள்ள மூசா, சகினா, சுவாப்பா மற்றும் மினா பள்ளிவாசல்களில் அத்து மீறி நுழைந்து, அவற்றுக்குப் பூட்டுப்போட்டு உள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்துள்ளனர் என மேலும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த மஸ்ஜித்களில் ஆயுதங்கள் இருந்ததாக கென்யா பொலிஸார் குற்றம் சுமத்தி வந்த போதிலும், பிரதேச வாசிகள் அதனை முற்றிலும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   (ம -மு)

Advertisement

Post a Comment

 
Top