நேபாளத்தில் சுமார் 5 ஆயிரம் எருமைகளைக் கொன்று மத வழிபாடுகளில் அந்நாட்டு மக்கள் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விசித்திரமான மதச் சடங்கு நேற்று வெள்ளிக்கிழமை நேபாளத்தின் பரியர்பூர் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்திய எல்லையை அண்மித்துள்ள இப்பகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறான மதச் சடங்குகள் இடம்பெறுகின்றன.
இந்த வழிபாடுகளின்போது பல்லாயிரக்கணக்கான எருமைகள் பலியிடப்படுவது வழமையாகும். இவ்வாண்டு சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான எருமைகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழிபாட்டின்போது சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் மிருகங்கள் பலிகொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment