smile picker smile picker Author
Title: 9ம் திகதி ஜனாதிபதியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் எம்மோடு இணைந்து பாற்சோறு சாப்பிட கோட்டாபய ராஜபக்ஷவை பேருவளை வருமாறு அழைக்கிறேன்.
Author: smile picker
Rating 5 of 5 Des:
களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் முழுமையான ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே என்ற செய்தியை சீனன் கோட்டையில் நடைபெற்ற பாதுகாப்பு செ...
களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் முழுமையான ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே என்ற செய்தியை சீனன் கோட்டையில் நடைபெற்ற பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ- முஸ்லிம் மக்களுடனான மாபெரும் சந்திப்பு நிரூபித்துள்ளதாக பேருவளை நகர பிதாவும் பாதுகாப்புச் செயலாளரின் களுத்துறை மாவட்ட முஸ்லிம் இணைப்பாளருமான அல்-ஹாஜ் மில்பர் கபூர் தெரிவித்தார்.

பேருவளை முன்னாள் நகர பிதா மர்ஜான் பாசிலின் இல்லத்தில் நடைபெற்ற களுத்துறை மாவட்ட ஸ்ரீ ல. சு. கட்சி முஸ்லிம் பிரமுகர்களுடனான கலந்துரையாடலில் பேசும் போது அவர் இவ்வாறு கூறனார்.

அவர் மேலும் பேசும் போது கூறியதாவது, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எமது ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகும். 9ம் திகதி ஜனாதிபதியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் எம்மோடு இணைந்து பாற்சோறு சாப்பிட பாதுகாப்புச் செயலா ளரை பேருவளை வருமாறு இங்கு கூடியுள்ள முஸ்லிம்கள் சார்பில் அழைப்பு விடுக்கிறேன்.

இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நாம் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஜனாதிபதிக்கும் முஸ்லிம் சமூகத்தினருக்கு மிடையிலான உறவு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அந்த உறவு உடைந்து விடக்கூடாது. பேருவளை முஸ்லிம்களும் இம் மாவட்ட முஸ்லிம்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனேயே உள்ளனர் என்ற நல்ல செய்தியை முழுநாட்டிற்கும் இந்தக் கூட்டத்தின் மூலம் அறிவித்துள்ளோம் என்றார்.


Advertisement

Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment

 
Top