சில மாதங்களுக்கு முன்னர் ப்ரிஸ்மா என்று ஒரு ஆப் வந்தது. அது ஜஸ்ட் ஒரு பேசிக் ஆப் தான். இருந்தாலும் அது வந்த புதிதில் அதனை ட்ரை செய்வதும், ஷேர் செய்வதும் என்று உச்ச பீக்கில் அது இருந்தது போலத்தான் இப்போது இந்த Faceapp இருக்கிறது. இதுவும் நிச்சயம் சில நாட்களுக்கு மட்டும் தான்.
உங்கள் காதலியின் பெயர் என்ன?, நீங்கள் இறக்கப்போகும் ஆண்டு எது, உங்கள் மீது ரகசிய ஆசை யாருக்கு இருக்கிறது வகையறா ஆப்ளிகேஷன்களை பரிசோதிப்பதும், அதனை ஷேர் செய்வதும், அது காட்டும் இறப்பு ஆண்டை வைத்து நமது கடமைகளை முடிக்க அல்ல. இவை சின்னச்சின்ன சந்தோஷங்கள். இந்த சுவாரஷ்யங்களை பேஸ்புக்கில் மாத்திரம் தான் செய்யலாம். மீண்டும் Faceapp க்கு வருகிறேன். இதே போன்ற ஒரு Fake prediction தான் Faceapp. அது அன்றையநாளின் சுவாரஷ்யம் அவ்வளவு தான்.
கூத்துக்கட்டுவதற்கு பெண்வேஷம் போட கூடாது என்ற நபிமொழியை சம்பந்தமே இல்லாமல் இதனுடன் தொடர்பு படுத்தி அனுப்புவதும், பெண்வேஷம் போட்டு இன்பமடையும் பிரபலங்கள் என்று மொண்ணைத்தனமாக பதிவதும், ஆண்மையில்லாதவர்கள் என்று விமர்சிப்பதும் டைம்லைனை அலங்கரிக்கும்போது ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. நகைச்சுவை உணர்வுள்ளவர்கள் பேஸ்புக்கின் பயன் என்ன, தனிப்பட்ட வாழ்க்கை என்ன என்பதில் தெளிவுடனேயே இருக்கிறார்கள். ஆனால் அது தெரியாத அவ்வப்போது வந்துபோகும் சில So called கண்ணியவான்களுக்குத் தான் பேஸ்புக்கையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரித்தறிய தெரியாமல் இருக்கிறது.
எதையும் விமர்சித்து தன்னையும் ஒரு அங்கியாக பிரகடனம் செய்ய இந்த 'பேங்க் ஒண்ண கட்டிக்கொடுத்தா நடத்துறம்' பேர்வழிகள் தான் பேஸ்புக்கையும் ப்ரின்ஸிப்பல் ஆபீஸ் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
-Rimaz Ahamed-
Post a Comment