சொட்டை மரபியல் சார்ந்ததாக இருந்தாலும் சிலருக்கு உபயோகப்படுத்தும் ஷாம்பு மற்றும் சரியான வாழ்க்கைமுறையில்லாததால் சொட்டை விழ ஆரம்பிக்கும்.
இதனை தடுக்க முடியும். ஆனால் வந்த பின் என்ன செய்வது என கவலைப்படுகிறீர்களா?
இந்த குறிப்புகள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும். இயற்கையானது. ஆயுர்வேத சக்தியுடையதாகும்.
ஸ்கால்ப்பில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து 20 நிமிடம் கழித்து குளியுங்கள். சொட்டையான இடத்தில் முடி வளர்ச்சி வளர்ச்சி ஆரம்பிக்கும்.
பூசணிக் கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவினால் சொட்டை தலையிலும் முடி வளர ஆரம்பிக்கும். அடர்த்தியான கூந்தல் பெறலாம்.
கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும், முடியும் வளரும். முடி உதிர்தல் கட்டுப்படும்.
முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர நேர்வளங்கொட்டையை (ஆடுர்வேத மருந்து கடையில் கிடைக்கும்) உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவாலாம்.
முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தை காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.
சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.
Post a Comment