நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு இணைப்புகளிலும், அதாவது, கை முட்டி, அக்குள், கால் முட்டி, இடுப்பு போன்ற பகுதிகளில், நிணநீர் மண்டலம் இருக்கிறது. இதிலிருந்து சுரக்கும் நிண நீரானது, நம் உடலில் இருக்கும் தைராய்டு, கணையம், பிட்யூட்டரி உள்ளிட்ட எல்லா நாளமில்லா சுரப்பிகளுக்கும் போய் சேருகிறது.இந்த நாளமில்லா சுரப்பிகள் சரியாக சுரக்க வேண்டுமெனில், இந்த நிணநீர் மண்டலம் தான் அவசியம். இந்த நிணநீர், ரத்தத்துடன் சேர்ந்து தான், உடலின் எல்லா இடங்களுக்கும் போய் சேருகிறது. நம் கால், இணைப்புகளில் இருந்து நிணநீரும், ரத்தமும், அதோடு சில கழிவுகளும் சேர்ந்து, புவியீர்ப்பு சக்தியை எதிர்த்து,
மேலே இருக்கும் நம் உடல் உறுப்புகளுக்குப் போய் ஆக வேண்டும். இதை சரியாக, ‘வாங்கி தள்ளுகிற’ வேலையை நம் கெண்டைக்கால் பகுதி தான் செய்கிறது. கெண்டைக்கால்களில் தொடர்ந்து அழுத்தம் தரும்போது, ரத்த ஓட்டம் பாதித்து, கழிவுகளுடன் அங்கேயே தேங்கி நின்று விடும். அதனால், நாளமில்லா சுரப்பிகளில் இருந்து சுரப்பி நீர் சரியாக வெளியேறாது. இதன் விளைவாக, தைராய்டு, இர்ரெகுலர் பீரியட்ஸ் போன்ற ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வர, நிறைய வாய்ப்புகள் உள்ளன.
Post a Comment