smile picker smile picker Author
Title: 14 வயதில் பாடசாலையின் ஒருநாள் அதிபரான மாணவி
Author: smile picker
Rating 5 of 5 Des:
ஜார்கண்ட் மாநிலத்தின் துர்குவில் உள்ள பள்ளியில் 14 வயது மாணவி பள்ளியின் முதல்வராக ஒருநாள் முழுக்க பணியாற்றியுள்ளார். இது குறித்த விரிவ...

ஜார்கண்ட் மாநிலத்தின் துர்குவில் உள்ள பள்ளியில் 14 வயது மாணவி பள்ளியின் முதல்வராக ஒருநாள் முழுக்க பணியாற்றியுள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்..

ஜார்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பம் பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் 14-வயது மாணவி ஒருநாள் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஒருநாள் முதல்வர் அனுபவம் குறித்து கருத்து தெரிவித்த மாணவி, தன் வாழ்க்கையில் பள்ளியின் முதல்வராக கடினமாக உழைப்பதாக தெரிவித்தார். 

பள்ளியின் ஒருநாள் முதல்வராக நியமிக்கப்பட்ட பிரியண்கா பள்ளிக்கு வந்ததும் பள்ளியின் முதல்வர் சுனில் யாதவ் மற்றும் கிராம தலைவர் லக்ஷமி சரன் சிங் ஆகியோர் முதல்வர் அறைக்கு பிரியண்காவை அழைத்து சென்றனர். சிறிது நேரம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பின் பள்ளியின் காலை வேளைக்கான கூட்டத்தில் கலந்து கொண்டார். 

கூட்டத்தில் மாணவர்களிடையே உரையாற்றிய பிரியண்கா, பிரதமரின்  பேடி பச்சாவ், பேடி படாவ் திட்டத்தை வெற்றிகரமாக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முக்கிய பங்கு வகிப்பர் என தெரிவித்தார். கூட்டத்தை தொடர்ந்து பள்ளியின் அனைத்து வகுப்புகளையும் மேற்பார்வையிட்டு, மதிய உணவை மாணவர்களுக்கு பரிமாறப்படும் முன் சுவைத்தார். 

கிழக்கு சிங்பம் மாவட்ட துணை ஆணையர் சஞ்சய் குமார் பாண்டே துவக்கிய இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கல்வியின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டுவதோடு, ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் என பாண்டே தெரிவித்தார். அடுத்த மாதம் முதல் மாதம் ஒருவர் என்ற வீதம் மாணவர்களுக்கு ஒருநாள் முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Post a Comment

 
Top