தினமும் 20 இலட்சம் மக்கள் கொழும்பு மாநகரத்திற்கு வந்து செல்கிறார்கள்.
7.5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொழும்பில் வாழ்கின்றார்கள்.
சுற்றுலா மற்றும் வியாபார நோக்கத்தோடு தினமும் 30 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வந்து செல்கிறார்கள்.
800 டன் குப்பைகள் தினமும் மீதொடமுல்லைக்கு வந்து சேர்கின்றன.
அன்னளவாக ஒரு மணிதன் தினமும் 266g குப்பைகளை வீசிச்செல்கிறான்.
*தினமும் கொழும்பு நகரத்திற்கு வரும் மக்களில் நீங்களும் ஒருவாரா ??
ஏதோ ஒரு வகையில் எங்களாலும் இம்மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் இனி வரும் காலங்களில் இதற்கு மாற்றீடு என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்போம்.
1. தினமும் காரியாலயத்திற்கு கொண்டு வரும் சாப்பாடு பார்சல் செய்யப்படாமல் தினமும் உபயோகபடுத்தும்படியான சாப்பாடு பெட்டி (Lunch Box) பாவிப்போம்.
2. பிலாஸ்டிக் தண்ணீர் போத்தல் மற்றும், பிலாஸ்டிக் குளிர்பான போத்தல் பாவனையை கட்டுப்படுத்துவோம்.
3. Tissue (டிசு) மற்றும் கடதாசி,பொலித்தீன், பாவனைய முடியுமானளவு குறைப்போம்.
4. பஸ் மற்றும் இரயில் பயணங்களின் போது கழிவுகளை வெளியே வீசாதிருப்போம்.
5. பொலித்தீன் பைகளை புறக்கனிப்போம்.
6. திண்மக்கழிவகற்றல் முறையை சரியாக பேணும்படி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்போம்
இவ்வறான செயற்பாடுகளில் நீங்களும் பங்கெடுத்தால் தினமும் 266g குப்பைகளை வீசுவதிலிருந்து ஆகக்குறைந்தது 100 g குப்பைகளாக குறைத்துகொள்ள முடியும்.
எம்மால் முடிந்தை நாங்களும் செய்வோம். குப்பைகளை குறைப்போம். சிறந்ததொரு சமுதாயத்தை கட்டியெழுப்புவோம்.
Azeem Jawfar
Post a Comment