smile picker smile picker Author
Title: இந்தியா ஏழை நாடு என அவமதித்த ஸ்நாப்சாட்-ஐ ஒரு ஸ்டார் ரேட்டிங்குக்கு குறைத்த பயனாளிகள்
Author: smile picker
Rating 5 of 5 Des:
இந்தியா ஒரு ஏழை நாடு என்று கருத்து தெரிவித்த ஸ்நாப் சாட் நிறுவனத்திற்கு இந்திய பயனாளிகள் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர். பிரபல குற...

இந்தியா ஒரு ஏழை நாடு என்று கருத்து தெரிவித்த ஸ்நாப் சாட் நிறுவனத்திற்கு இந்திய பயனாளிகள் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர்.

பிரபல குறுந்தகவல் செயலியான ஸ்நாப்சாட் நிறுவனத்திற்கு இந்தியாவில் 40 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில்,  இந்தியா ஒரு ஏழை நாடு, அதனால் எங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் எண்ணமில்லை என்று அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. இவன் ஸ்பிகல் கூறி இருந்தார்.

இருப்பினும் ஸ்பிகலின் இந்த கருத்தினை ஸ்நாப் சாட் நிறுவனம் மறுத்து இருந்தது. இந்தியா கருத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஸ்நாப் சாட் நிறுவனத்திற்கு பதிலடி கொடுக்க அதன் இந்திய வாடிக்கையாளர் அன் இன்ஸ்டால் செய்ய ஆரம்பித்தனர். 

இதனையடுத்து பலரும் ஸ்நாப் சாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிலிருந்து வெளியேறி வந்தனர்.  #UninstallSnapchat #boycottsnapchat என்பவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. அதில் இந்திய பயனாளிகள் தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி கடுமையாக சாடினர்.

Advertisement

Post a Comment

 
Top