smile picker smile picker Author
Title: பெண்களே உஷார்..! ஸ்குரு வடிவ கேமரா..! சிக்கிடாதீங்க..!!
Author: smile picker
Rating 5 of 5 Des:
இவ்வுலகில் என்னதான் கட்டுப்பாடுகள் வந்தாலும், அந்த வீடியோக்களுக்கு இணையதளங்களில் எப்போதுமே குறைவில்லை என்றே சொல்லலாம். பெண்களின் ஆபா...

இவ்வுலகில் என்னதான் கட்டுப்பாடுகள் வந்தாலும், அந்த வீடியோக்களுக்கு இணையதளங்களில் எப்போதுமே குறைவில்லை என்றே சொல்லலாம்.
பெண்களின் ஆபாச காட்சிகள், குளியலறை காட்சிகள், தங்கும் விடுதிகளில் மறைமுகமாக வெப்கேமராக்களை வைத்து உடை மாற்றுவது உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களின் மூலம் கசியவிட்டு இளைஞர்களை வசப்படுத்தி வருவதும் தொடர்கதையாகத்தான் உள்ளது.
இந்த சம்பவங்களில் ஏராளமான பெண்கள் சிக்குவதும், இந்த ஆபாச வீடியோக்களால் இளைஞர்கள் பட்டாளம் தவறான வழிகளுக்கு வித்திடுகிறது.
இதனால் டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் பாலியல் வன்முறை போன்ற சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபடுவதும் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், வெப் கேமரா, பேனா வடிவிலான கேமராவை வைத்தால் கண்டுபிடித்துவிடுகின்றனர் என்ற நிலையில், தற்போது ஸ்குரு வடிவிலான புதிய வெப் கேமராவை வடிவமைத்துள்ளனர். எனவே, தங்கும் விடுதிகள், பொது இடங்கள் உள்ளிட்டவைகளில் பெண்கள் உஷாராகவும், விழிப்புடனும் இருப்பது நல்லது.

Advertisement

Post a Comment

 
Top