smile picker smile picker Author
Title: மரணம் நிகழ்வதற்கு முன் இந்த அறிகுறிகள் தோன்றுமாம்… நாங்க சொல்லல…
Author: smile picker
Rating 5 of 5 Des:
நமது இதிகாசம், புராணங்களில் ஒருவர் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது. எப்படி வாழ்ந்தால் ஒருவரது எதிர்காலம் எப்படி இருக்கும், கர...

நமது இதிகாசம், புராணங்களில் ஒருவர் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது. எப்படி வாழ்ந்தால் ஒருவரது எதிர்காலம் எப்படி இருக்கும், கர்மா என்றால் என்ன? எதனால் அடுத்த பிறவி எடுக்கிறார்கள், மறுபிறவி என ஒன்று இருக்கிறதா? என பலவன கூறப்பட்டுள்ளன.
இவை எல்லாம் உண்மையா? பொய்யா? கட்டுக்கதையா? வெறும் கதையா? என இன்றளவும் பல மேடைகளில் தலைப்பாக கொண்டு பேசப்படுகின்றன. 50:50 இதை உண்மை என்றும் பொய் என்றும் கூறி தான் வருகிறார்கள்.
மரணம் என்பது யாரும் விரும்பாத ஒன்று. ஆனால், பிறக்கும் போதே மரணம் நிச்சயம் என்பது எழுதப்படாத நியதி. ஆனால், அந்த மரணம் எப்போது வருமென யாராலும் கணிக்க முடியாது.
அப்படிப்பட்ட மரணம் நிகழ போகிறது என சிவ புராணத்தில் கூறப்பட்டிருக்கும் 11 அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்…
அறிகுறி 1
வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் செயலிழப்பு அல்லது செயலிழந்து வருகிறது எனில், ஆறு மாதங்களில் இறப்பு நேரிடும் என சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
அறிகுறி 2
திடீரென உடல் வெள்ளை / மஞ்சளாக நிறம் மாறத் துவங்குகிறது. உடலில் ஆங்காங்கே சிவப்புப் புள்ளிகள் தென்படுகின்றன என்றால் அடுத்த ஆறு மாதத்தில் அந்த நபர் உயிரிழக்க நேரிடலாம்.
அறிகுறி 3
தொண்டை மற்றும் நாக்கு ஒருவருக்கு விடாமல் வறட்சி அடைந்துக் கொண்டே இருக்கிறது எனில், அந்த நபர் விரைவில் இறந்துவிடுவார் என்று அர்த்தம்.
அறிகுறி 4
ஒருவரது இடது கை அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக நடுங்கிக் கொண்டே இருக்கிறது / நாவில் வறட்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நபர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவர்.
அறிகுறி 5
ஒருவரால் கருப்பு அல்லது சிவப்பு நிற வட்டத்தை நிலா மற்றும் சூரியனில் பார்க்க முடிகிறது என்றால் அவர் 15 நாட்களுக்குள் இறந்துவிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிகுறி 6
ஒருவரால் நிலா மற்றும் நட்சத்திரங்களைப் பார்க்க முடியவில்லை / மிக மந்தமாக தான் தெரிகிறது எனில், அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிகுறி 7
ஒருவர் திடீரென நீல ஈக்களால் சூழப்படுகிறார் என்றால் அவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்று அர்த்தமாம்.
அறிகுறி 8
கருடன், காகம், கழுகு / புறா ஒருவரது தலையில் வந்து அமர்வது மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிகுறி 9
ஒருவர் தனது நிழலில் தனது தலைப்பகுதியை காண முடியவில்லை என்பது மற்றுமொரு மரணத்தின் சமிக்ஞை என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிகுறி 10
எதையும் சரியாக பார்க்க முடியாமல் போவது / நெருப்பைத் தெளிவாகப் பார்க்க முடியாமல் போவது மரணம் உங்களை எட்டிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் சமிக்ஞை.
அறிகுறி 11
எண்ணெய், தண்ணீர் போன்றவற்றில் ஒருவரது பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால் ஆறு மாதத்தில் அவர் இறந்துவிடுவார் என சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Post a Comment

 
Top