smile picker smile picker Author
Title: பாடசாலைகளில் டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் மாதிரி வகுப்பறை ஆரம்பம். ஆஹா நாடு வளருது
Author: smile picker
Rating 5 of 5 Des:
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அமைய பாடசாலைகளில் டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் மாதிரி வகுப்பறைகளை, தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் அமைப்பத...

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அமைய பாடசாலைகளில் டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் மாதிரி வகுப்பறைகளை, தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக மாதிரி டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் வகுப்பறை ஒன்று கல்வி அமைச்சில் இன்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்¸ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி உட்பட அமைச்சின் மேலதிக செயலாளர்கள்¸ அதிகாரிகள், அனுசரனையாளர்கள் கலந்துகொண்டார்கள்.
தற்போது அமைக்கபட்டிருக்கும் இந்த டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் வகுப்பறைகளை மாணவர்கள்¸ ஆசிரியர்கள், அதிபர்கள் பார்வையிடவும் பயன் பெறவும் முடியும். தற்போது நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் இத்திட்டத்தை அமுல்படுத்த உபகரணங்கள் வழங்கல் உட்பட ஏனைய நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Post a Comment

 
Top