smile picker smile picker Author
Title: வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா முபாரக் என்ற ஒரு வாசகம் நன்மை பயக்குமா??? இதோ தெளிவு
Author: smile picker
Rating 5 of 5 Des:
வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா முபாரக் என்ற ஒரு வாசகத்தை ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இந்த வார்த்தை மார்க்கத...

வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா முபாரக் என்ற ஒரு வாசகத்தை ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இந்த வார்த்தை மார்க்கத்தில் உள்ளதாக நினைத்துக் கொண்டுதான் சொல்கின்றார்கள். உண்மையில் வெள்ளிக்கிழமையில் ‘ஜும்மா முபாரக்” என்ற வாசகத்தை சொல்வதற்கு குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ எவ்வித ஆதாரமும் கிடையாது.

மார்க்கத்தில் எந்தவொரு செயலையாவது நாம் செய்தால் அதற்கு நபியவர்களின் வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் அது மார்க்கமாக அங்கீகரிக்கப்படாது.

இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது ரத்து செய்யப்படும்.(புகாரி – 2697)

ஆக மார்க்கத்தில் இல்லாத எந்தவொரு செயலை யார் செய்தாலும் அது மார்க்கமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஜும்மா முபாரக் என்ற ஒரு வார்த்தையை வெள்ளிக்கிழமையில் சொல்வது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பித்அத் ஆகும்.

எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்.

(அல்குர்ஆன் : 30:29)

Advertisement

Post a Comment

 
Top