smile picker smile picker Author
Title: ஒரு நாளைக்கு 40 சிகரெட் புகைத்த குழந்தை... 9 வருடத்திற்கு பின்பு எப்படியுள்ளார் தெரியுமா? (வீடியோ இணைப்பு)
Author: smile picker
Rating 5 of 5 Des:
இந்தோனேசியாவைச் சேர்ந்த Ardi Rizal என்ற 2 வயது சிறுவன் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் நாள் ஒன்றுக்கும் 40 சிகரெட் குடிக்கிறான் என்ற...

இந்தோனேசியாவைச் சேர்ந்த Ardi Rizal என்ற 2 வயது சிறுவன் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் நாள் ஒன்றுக்கும் 40 சிகரெட் குடிக்கிறான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

தொடர்ந்து சிகரெட் குடித்து வந்ததால் அவனுக்கு அதிகமான பசி ஏற்பட்டது, இதனால் அவனது உடல் எடையும் அதிகரித்தபடி இருந்தது. இதனால் மிகவும் சோகத்தில் இருந்த Ardi Rizal குடும்பத்திற்கு, இந்தோனேசியா அரசு உதவ முன்வந்தது.

இதன்படி சிறுவனுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் 24 கிலோ எடை குறைந்ததுடன் சிகரெட் பழக்கத்தையும் முற்றிலுமாக நிறுத்தினான். அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.

தற்போது 9 வயதை எட்டியுள்ள Ardi Rizal பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன் என்ற பெயரை பெற்றுள்ளான். அதுமட்டுமின்றி தன் வகுப்பில் நான்காவது ரேங்க் எடுத்து படிப்பில் அசத்தி வருகிறான். மேலும் ஆசிரியர்கள் Ardi Rizal-ஐ பள்ளியில் ஒரு முதன்மையான மாணவன் என்றும் மற்ற மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளான் என்று புகழ்ந்து கூறுகின்றனர்.​ -


Advertisement

Post a Comment

 
Top