smile picker smile picker Author
Title: 131 பாடசாலைகளில் ஒரு மாணவர் கூட உயர் தரத்திற்கு தெரிவாகவில்லை.கேவலக் கல்வி இலங்கையில்
Author: smile picker
Rating 5 of 5 Des:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 131 பாடசாலைகளில் ஒரு மாணவர் கூட உயர் தரத்திற்கு தெரிவா...

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 131 பாடசாலைகளில் ஒரு மாணவர் கூட உயர் தரத்திற்கு தெரிவாகவில்லை.
இலங்கை பரீட்சைத் திணைக்கள புள்ளிவிபரத் தகவல்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
131 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியுள்ளனர்.
எனினும் அந்தப் பாடசாலைகளிலிருந்து ஒரு மாணவரேனும் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுக்கொள்ளவில்லை.
கண்டி, காலி, கேகாலை ஆகிய கல்வி வலயங்களின் பாடசாலைகளே அதிகளவில் இந்தப் பட்டியலில் உள்ளடங்குகின்றன.
குறித்த கல்வி வலயங்களில் தலா ஆறு பாடசாலைகளில் எந்தவொரு மாணவரும் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுக்கொள்ளவில்லை.

Advertisement

Post a Comment

 
Top