சிறு தவறு காரணமாக பல்கலைக்கழக வாய்ப்பை இழந்துள்ள மாணவி தொடர்பான செய்தி தெஹியத்தகண்டி சிரிபுர பிரதேசத்தில் தெரியவந்துள்ளது.
ஹசின் சந்தமாலி என்ற குறித்த மாணவி கலை பிரிவில் உயர்தர பரீட்சையில் தோற்றி அழகியல் கலை பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றிருந்தார்.
எனினும் பல்கலைக்கழக நுழைவு தொடர்பாக முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தில் இருந்த குறைபாடு காரணமாக அவர் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த மாணவி கூறிய போது, "இணையத்தளம் ஊடாக எனது விண்ணப்பத்தை அனுப்பினேன்.
பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இருந்து கடிதம் ஒன்று வந்தது, எனது விண்ணப்பத்தின் இரண்டாவது பக்கம் ஆணைக்குழுவிற்கு கிடைக்கவில்லை என்று.
7 நாட்களுக்குள் அந்த குறைபாட்டை நீக்கி விண்ணப்பத்தை அனுப்புமாறே அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
எனினும் 6 ஆவது நாளோ எனக்கு அந்த கடிதம் கிடைத்தது.
பின்னர் நான் உடனடியாக குறைப்பாட்டை நீக்கி பதிவு அஞ்சல் ஊடாக குறித்த விண்ணப்பத்தை அனுப்பினேன்.
சில நாட்களுக்கு பின்னர் எனக்கு கடிதம் ஒன்று வந்தது, எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக. குறித்த குறைபாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்க வில்லை என்றே அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் நான் கொழும்பிற்கு சென்று குறைபாடு தொடர்பாக இருந்த அனைத்து ஆவணங்களையும் ஆணைக்குழுவில் ஒப்படைத்தேன்.
எனினும் எனக்கு பின்னர் கடிதம் ஒன்று வந்தது, எனது கோரிக்கையை ஏற்க முடியாது என்று. இந்த தொழில்நுட்பம் மற்றும் செல்லாத அந்த பக்கத்தால் தான் என் வாழ்க்கை இன்று இருண்டுள்ளது.
எனக்கு ஒரு நியாயத்தை பெற்று தருமாறு " அந்த மாணவி கண்ணீருடன் அனைவரிமும் கோரியுள்ளார்.
Post a Comment