2011ம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரிய ராணுவம் கடுமையான யுத்தத்தை நடத்தி வருகிறது. ரஷ்ய ராணுவத்தின் உதவியுடன் சிரியா மிகவும் பிரபலமான பாலைவன நகரமான பல்மைராவை ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டாவது முறையாக அண்மையில் மீட்டது.
பல்மைரா பகுதிக்குள் ஊடுருவிய இஸ்ரேல் ராணுவ விமானத்தை சிரிய ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டு வீழ்த்தியது. லெபனான் பகுதி வழியாக சிரிய வான் எல்லைக்குள் இஸ்ரேலின் 4 போர் விமானங்கள் ஊடுருவின. இதனையடுத்து சிரிய ராணுவத்தினர் ஒரு விமானத்தை பல்மைராவுக்கு செல்லும் வழியில் சுட்டு வீழ்த்தினர். மேலும் ஒரு விமானம் தாக்கப்பட்டது. இதனையடுத்து மற்ற விமானங்கள் தப்பி சென்றன” என்று சிரிய ராணுவம் தெரிவித்து இருந்தது.ஏற்கனவே சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பூசல்கள் நீடித்து வரும் நிலையில், இந்த விவகாரம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தங்கள் நாட்டு விமானத்தை மீண்டும் சிரியா வான்படைகள் தாக்கினால் சிரியாவின் வான்பாதுகாப்பு அமைப்புகளை தகர்த்தெறிவோம் என்று இஸ்ரேல் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி அவிக்டோர் கூறியதாக இஸ்ரேலின் பொது வானொலி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதில் இஸ்ரேல் கூறுகையில், “ எங்கள் விமானத்திற்கு எதிராக சிரியா தங்கள் வான்பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தினால் நாங்கள் அவற்றை அழிக்க தயங்கமாட்டோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment