மலையாள இளைஞர் ஒருவரின் அனுமதியின்றி அவரது சீறுநீரகம் இலங்கையில் வைத்துகடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்வபவம் இலங்கையில் உள்ள பிரபல வைத்தியசாலையில் மூன்று வருடங்களுக்குமுன்னர் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்குமாறு சிபிஐயிடம் அரசாங்கம்பரிந்துரைத்துள்ளது என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக போலிக் காரணம் கூறி, திருச்சூர்கொடுங்கல்லூர் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டார்.
இலங்கையில் உள்ள மருத்துமனைக்கு பரிசோதனை செய்வதற்கு அழைத்துச் சென்று,மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் அவரது சிறுநீரகங்களில் ஒன்றை மோசடியாளர்கள்கடத்தியுள்ளார்.
மேலும்,குறித்த மோசடிக்காரர்கள் விசா செலவுக்காக இளைஞரிடமிருந்து 1 லட்சம்வாங்கியுள்ளனர்.
கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் வைத்து இடது சிறுநீரகப் பரிசோதனை என்றபெயரில், இளைஞரின் சிறுநீரகம் நீக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு அதிகாரி ஒருவர்கூறியுள்ளார்.
சிறுநீரக மோசடி தொடர்பான சர்வதேச இணைப்புகளால்,மூன்று வருடத்திற்கு முன்னர்இளைஞர் ஒருவரின் சிறுநீரகத்தை நீக்கிய குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கைபிரஜைகள் உட்பட ஒன்பது பேருக்கு எதிராக கேரளபொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
சிறுநீரக உறுப்பு மாற்று மோசடிகள் தொடர்பில் இந்திய குற்றப்பிரிவுஅதிகாரிகள் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment