ஆசியாவின் மிகப்பெரிய யானை ஒன்று இலங்கையில் மீட்கப்பட்டுள்ளது.
காலில் ஆணி அடிக்கப்பட்ட நிலையில் சேற்றில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
யாருடைய உதவியுமின்றி இருந்த இந்த யானை இலங்கையின் கொட்டுகச்சி என்ற கிராம மக்களினால் காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்த கிராம மக்கள் யானையின் மீதுள்ள சேற்றினை கழுவுவதற்கும் அதனை காப்பாற்றுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
யானை தந்தத்தினால் காயம் ஏற்பட்டதா என்பது தொடர்பில் தெளிவாக தகவல் வெளியாகவில்லை.
யானையின் உடல் நிலை மோசமாக உள்ள போதிலும் அதனை காப்பாற்றுவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். எனினும் யானையின் காயம் மிக பெரியதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கம்பீரமான யானைகள் கொலை செய்யப்பட்டு, அதன் மதிப்பு மிக்க தந்தங்கள் உடைக்கப்பட்ட முதலாவது நாடாக இலங்கை காணப்படுகின்றது.
Post a Comment