இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் மாத்தளை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றிற்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுத்துள்ளார்.
மாத்தளை அலகவத்த பிரதேசத்தை சேர்ந்த நிர்மலா பத்மகுமார மெனிக்கே என்ற இந்த பெண்ணின் கணவர் கடந்த ஆண்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளுடன் தனியான அவர் அன்றாடம் வாழ்க்கை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்காலிகமாக வசித்த வீடு மற்றும் காணியை அடகு வைத்து ஐந்தரை லட்சம் பெற்றுள்ளார். 11 மற்றும் 7 வயது மகள்கள் இருவரும் கற்பதற்கான வசதிகளை ஏற்பாடு செய்துள்ளார்.
எனினும் எதிர்பார்த்ததனை போன்று அடகு வைத்த வீட்டினை அவரால் மீட்டிக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தனக்கு உதவுமாறு ஊடகங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதன் பின்னர் கிரிக்கெட் வீரர் டில்ஷான் அவர்கள் வாழ்வதற்கு ஏற்றதனை போன்று ஒரு வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கு வாழ்வதற்கு 25 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அந்த வீட்டினை டில்சான் மற்றும் மனைவி இணைந்து நேற்றைய தினம் திறந்து வைத்துள்ளனர்.
Post a Comment