smile picker smile picker Author
Title: கஞ்சா பாவளையாளரா நீங்கள்?: உங்களுக்கான அதிர்ச்சியான தகவல் இதோ....
Author: smile picker
Rating 5 of 5 Des:
புதிய ஆய்வின் மூலம் கஞ்சா பாவிப்பவர்களுக்கு சாதாரண நபர்களை விட மாரடைப்பு வருவது 4.6 மடங்கு அதிகமாகுமென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெ...
புதிய ஆய்வின் மூலம் கஞ்சா பாவிப்பவர்களுக்கு சாதாரண நபர்களை விட மாரடைப்பு வருவது 4.6 மடங்கு அதிகமாகுமென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உடல் ஆய்வியல் அமைப்பினர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தொடர்ச்சியாக 5 வருடங்கள் கஞ்சா பயன்படுத்தி வரும் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, சாதாரண நபர்களை விடவும் 4.6 மடங்கு அதிகமாக மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக, வொசிங்டனிலுள்ள இருதய நிபுணத்துவ மையத்தின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ச்சியான கஞ்சா பாவனை என்பது சர்வதேச மனநல அமைப்பினூடாக, ஒரு மன அழுத்த நோய் என்றும், ஒருவகை மூளை கோளாறு என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓஹியோவிலுள்ள, கிளீவ்லண்ட் கேஸ் வெஸ்டர்ன் ரிசெர்வ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களால், சுமார் 2 இலட்சத்து 10 ஆயிரம் கஞ்சா பாவனையாளர்களையும், 10 மில்லியன் கஞ்சா பாவனை அற்றவர்களையும் கொண்டு நடத்தப்பட்டுள்ள, ஆய்விலேயே குறித்த தரவுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் தலைமை ஆய்வாளர் வைத்தியர் டரிக் சமி தெரிவித்துள்ளார்.
அத்தோடு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,  கஞ்சா பாவனையாளர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளவர்கள், குடி மற்றும் புகையிலை பாவனை உடையவர்களை விட அதிகளவான இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு நோயை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் சமி, மேலும் குறிப்பிட்டுள்ளதாவது குறித்த போதை பொருள் தொடர்பாக, ஒரு சிரியளவான ஆராய்ச்சியே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் மேலும் பல்வேறு பயனுள்ள, ஆரோக்கியம்சார் தகவல்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Post a Comment

 
Top