சவுதி மன்னர் சலமான் ஆசியா பயணத்தை பாதியில் ரத்து செய்து விட்டு நாடு திரும்பிய நிலையில்சவுதி பட்டத்து இளவரசரும் துணைப் பிரதமருமான உள்துறை அமைச்சர முகமது பின் நய்ப் பத்திரிகையாளர் சந்திப்பில் பொது மன்னிப்பு வழங்க பட்டுள்ளது என்ற மகிழ்ச்சி செய்தியை உத்தியோக பூர்வமான அறிவித்துள்ளார்.
இதன்படி சவுதியில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற மார்ச் 29, 2017 முதல் 90 நாட்களுக்கு பொதுமன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சவுதி செய்தி ஏஜன்சி SPA-யினை மேற்கோள் காட்டி மற்ற சவுதி பத்திரிகைகள மற்றும் இந்தியா இலங்கை ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பொதுமன்னிப்பின் படி
தொழில் விதிகளை மீறிய நபர்கள், (Sponsor) அரபியிடம் இருந்து வெளியே வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள், விசா காலாவதி தேதி முடிந்த பிறகும் சவுதியில் தங்கி வேலை செய்யும் நபர்கள், ஹஜ் உம்ரா யாத்திரை வந்து தாயகம் திரும்பாத நபர், Visiting விசாவில் வந்து காலாவதி ஆகியும் தாயகம் திரும்பாத நபர்கள் பிழையும் தண்டனையும் இன்றி இதை பயன்படுத்த தாயகம் திரும்பி செல்லலாம்.
இந்த பொதுமன்னிப்பு மூலம் எளிதாக வரையறை செய்யப்பட்ட சில சவுதி சட்ட நடவடிக்கைகள் முடிந்து தாயகம் திரும்பலாம் மற்றும் திரும்பவும் சவுதிக்கு வேலைக்கு வரலாம் என்பது இந்த முறை அறிவிக்கப்பட்டது. இதை சவுதி Passport துறை(தூதரகம்) உறுதி செய்துள்ளது.
இதுவே இந்த முறை அறிவிக்கப்பட்ட
பொதுமன்னிப்பின் கூடுதல் சிறப்பு ஆகும். எனவை இந்த பொது மன்னிப்பு இந்தியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரச்சனையால் வாடும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளருக்கு பெரும் வாய்ப்பாகும்.
இதற்கு முன்னர் 2013-யில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. அந்த ஆண்டு இந்தியா இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு நபர்கள் தங்கள் தாய் நாடுகளுக்கு திரும்பினார்.
சவுதியில் 55 லட்சத்துக்கும் அதிகமான நபர் சட்டத்தை மீறி தங்கியுள்ளதாக சூறா கம்மிஷான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறி மீண்டும் சவுதியிலேயே தங்கும் நபர்களுக்கு இந்த பொதுமன்னிப்பு காலம் முடிந்த பிறகு கடும் பிழை மற்றும் சிறைத்தண்டனை வழங்கவும் வரையறை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து குவைத்தில் பொதுமன்னிப்பு வந்தாலும் அதிசயம் இல்லை. ஏப்ரல் 1 முதல் குவைத்தில் சட்டத்திற்கு புறம்பான தங்கியுள்ள நபர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.(KTP)
Post a Comment