https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: ஹிஸ்புல்லாஹ்வின் தரம் கெட்ட அரசியல் வங்குரோத்தின் உச்சம் – ஹக்கீம் பற்றிய தவறான வீடியோ வெளியிட்டமை
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
காத்தான்குடியில் தன்னைப் பலம் வாய்ந்த ஒரு அரசியல்வாதியாகவே கருதிக் கொள்ளும் முன்னாள் பிரதியமைச்சரும் நீண்ட கால பாராளுமன்ற உறுப்பினர...


unnamed (1)
காத்தான்குடியில் தன்னைப் பலம் வாய்ந்த ஒரு அரசியல்வாதியாகவே கருதிக் கொள்ளும் முன்னாள் பிரதியமைச்சரும் நீண்ட கால பாராளுமன்ற உறுப்பினருமான ஹிஸ்புல்லா தற்சமயம் கிழக்கிலங்கையில், குறிப்பாக அவர் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையினால் பெரிதும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளமையை தனது சகாக்கள் மூலம் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
வட – கிழக்கு முஸ்லிம் அரசியலின் முக்கிய பிரமுகர்களான ஏனைய முஸ்லிம் கட்சித் தலைவர்கள் போன்றே ஹிஸ்புல்லாவுக்காகவும் ‘பேஸ்புக் படையணி’ ஒன்று இயங்கி அவரது நாளாந்த நடவடிக்கைகளை பிரச்சாரம் செய்து வருகிறது. அதுவே தற்போதைய அரசியல் நிலை என்பதால் அதில் தவறு காண்பதற்கோ கருத்துக்கூறுவதற்கோ இல்லையெனினும், நேற்றைய தினம் ஹிஸ்புல்லாவின் மன உளைச்சல் சற்று அதிகமானதன் வெளிப்பாடாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தொடர்பான, தொழில்சார் நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட காணொளியொன்று அவரது பிரதான பிரச்சாரகர்களால் வெளியிடப்பட்டு சுய திருப்தி காணப்பட்டுள்ளது.
இந்தக் காணொளியை மிகவும் நேர்த்தியாக இந்தியாவில் எடிட் செய்திருப்பதாகவும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் நேற்று முதல் எமக்குத் தகவல்கள் வந்து கொண்டிருப்பினும், சோனகர்.கொம்மின் உத்தியோகபூர்வ பக்கம் எது என்று எமது வாசகர்கள் நன்கறிவார்கள் என்பதால் அதனைத் தவிர்த்திருந்தோம்.
எனினும் குறித்த செயற்பாட்டின் பின்னணி குறித்தும் ஆராய நாம் தவறவில்லை. அந்தச் செயற்பாட்டில் தாம் ‘கெட்டிக்காரர்கள்’ என்பதைக் காட்டிக்கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தின் கவர் போட்டோ மற்றும் ப்ரொபைல் (Profile) போட்டோக்களைப் பயன்படுத்தி இணையத்தின் பெயருக்கு நடுவில் இரு புள்ளிகள் இட்டு (sonakar..com), வேறு ஒரு இணையத்திற்கான இணைப்பையும் வழங்கி ஒரு புதிய பக்கத்தை உருவாக்கிய முன்னாள் பிரதியமைச்சரின் சமூகவலைத்தள, பிரதான பிரச்சாகரான ரிஸ்கான் பாரூக் மற்றும் ‘நல்ல நண்பன்’ என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இங்கு படத்தில் காணப்படும் நபரே இச்செயற்பாட்டின் பிரதானியாக இருக்கிறார்.
குறித்த காணொளியைப் பதிவேற்றி அடுத்த ஓரிரு நிமிடங்களுக்குள் சுமார் 49 பேர் அளவில் ‘Tag’ செய்து ஏனைய பரப்புரை வேலைகளில் இவர் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதேவேளை, இவ்வாறு ஒரு திட்டமிட்ட செயல் இடம்பெறுவதாக எமக்கு அங்கு செய்யப்பட்டவர்கள் உட்பட ஏனைய வாசகர்களும் அறிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நாம் Facebook நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொண்ட நடவடிக்கைப் பிரகாரம் இவரின் நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதோடு அவை சம்பந்தப்பட்ட தரப்புக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபர் தொடர்பில் தேவைப்படும் சட்டநடவடிக்கைகளை எடுக்கப் போவதாக பாதிக்கப்பட்ட தரப்பு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் கட்டாரில் வசித்து வரும் மேற்படி நபரின் விபரங்கள் யாவும் திரட்டப்பட்டுள்ளதோடு காத்தான்குடியில் அவரது உறவினர்களை விசாரணைக்குட்படுத்தவும் அதேவேளை கட்டார் குடியகல்வுத் திணைக்களம் மற்றும் இலங்கை விமான நிலைய அதிகாரிகளும் தொடர்பு கொள்ளப்பட்டிருப்பதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமோ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீனோ அல்லது முஸ்லிம் அரசியல் வாதிகளோ விமர்சனத்துக்குள்ளாவது மிகவும் சாதாரணமாக நிகழும் நிகழ்வெனினும் எமது தளத்தின் வடிவமைப்பைப் பயன்படுத்தி ஒரு திட்டமிட்ட செயற்பாடு இடம்பெற்றிருப்பது குறித்து எமது வாசகர்கள் மீதுள்ள நம்பிக்கையின் நிமித்தம் நாம் அலட்டிக்கொள்ளவில்லை. எனினும், குறித்த காணொளியை உருவாக்குவதிலும் அதனைப் பிரச்சாரப்படுத்துவதிலும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் பங்கு குறித்து தரப்பட்டிருக்கும் தகவல்கள் கவலைக்குரியனவாகும்.
நீண்ட காலம் அரசியலில் நிலைத்திருக்கும் ஹிஸ்புல்லா தமது வெற்றிக்காக ஏனைய தலைவர்களை மானபங்கப்படுத்துவதை விட நேருக்கு நேர் விவாதங்களில் பங்குபற்றி தமது தரப்பு நியாயத்தை மேலோங்கச் செய்வது விரும்பக்கூடிய ஜனநாயக முறையாக இருக்கும்.
எனினும், தமது நடவடிக்கைகளுக்காக கீழ்த்தரமான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பது கவலையையும் அதிர்ச்சியையும் உருவாக்கியிருப்பது மாத்திரமன்றி இது திட்டமிட்ட செயல் என்பதால் இது குறித்து எம்மிடம் இருக்கும் அனைத்துத் தகவல்களும் சட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.
இதனடிப்படையில் சமூக வலைத்தளத்தில் பல பெண்கள் பெயர்களில் கணக்குகளை உருவாக்கி, சர்ச்சைப் பிரபலமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட, ஹிஸ்புல்லாவின் குறித்த காணொளியை பேஸ்புக்கில் தரவேற்றி, அதனைத் தான் தொடர்பு பட்ட பக்கங்கள், இடங்கள், நண்பர்கள் வட்டாரங்கள் என அவசர அவசரமாக பிரபலப்படுத்த முயற்சித்ததோடு வேறு முஸ்லிம் பேஸ்புக் பக்கங்கள் ஊடாகவும் பரப்ப முயற்சி செய்த குறித்த ரிஸ்கான் பாரூக் எனும் நபரை யே மேலே படத்தில் காண்கிறீர்கள்.
அவருக்குத் துணையாக, தன்னையொரு மு.கா ஆதரவாளராக இனங்காட்டிக்கொண்டு மேலதிக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மேலும் ஒரு நபரை கீழ்க் காணலாம்.
இச்சூழ்நிலையில், தமது அரசியல் காழ்ப்புணர்வை அரங்கேற்ற சோனகர்.கொம் பேஸ்புக் வடிவமைப்பைத் திருடிச் செயலாற்ற வேண்டிய தேவையும், அவசியமும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு ஏன் இருக்கிறது எனும் கேள்விக்கான விடை மற்றும் விளக்கத்தினை மேலும் விரிவாக இணைக்க எண்ணியுள்ளோம். அண்மைக்காலமாக அவரது மஹிந்த ஆதரவு செயற்பாடுகள் அவ்வப்போது பகிரங்கப்படுத்தப்பட்டு வந்தமை உட்பட தன் கை வசமிருக்கும் பணத்தின் மூலமும் மஹிந்த விசுவாசத்தின் மூலமும் சமூக ஊடகங்களைக் குறி வைக்க ஆரம்பித்துள்ள ஹிஸ்புல்லாவின் இத்தொடர்புகளால் அவருக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லையென்பதும் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் இப்போதும் படைத்தவன் சட்டத்தின் முன் நாளை மறுமையிலும் முகங்கொடுக்கத்தான் போகிறார்கள்.
துரதிஷ்டவசமாக மேலே படங்களில் காணும் இரு முக்கிய செயற்பாட்டாளர்கள் தவிர, மேலும் தொடர்பு பட்டுள்ள பலரது விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதோடு ஹிஸ்புல்லாவின் தரம் தாழ்ந்த நடவடிக்கைகள் மேலும் அம்பலப்படுத்தப்படும் என்பதை அறியத்தருகிறோம்.
ஹிஸ்புல்லாவின் இந்த செயற்பாட்டின் பின்னணியின் அண்மைக்காலமாக அவர் முரண்பட்டு வந்த விபரங்கள் உட்பட மேலதிக விளக்கம் இன்ஷா அல்லாஹ், விரைவில் இணைக்கப்படும்.
– ஜௌபர் இப்ராஹிம்
சோனகர்.கொம்
இணைய மேற்பார்வையாளர்

Advertisement

Post a Comment

 
Top