கடந்த வருடம் ஜுன் நடுப்பகுதியில் அளுத்கம நகரில், பொது பல சேனாவின் தூண்டுதலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தினைத் தடுப்பதற்கு பொலிசாரால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனும் குற்றச்சாட்டு தொடர்பாக வழக்குத் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சம்பவத்திற்கு முன்னதாக பொபல சேனா அமைப்பு அங்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்ததையடுத்து பொலிசாரிடம் முன்கூட்டியே பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு பல்வேறு தரப்புக்கள் வேண்டிக்கொண்ட போதும் இவ்விடயத்தை அலட்சியமாகக் கையாண்டதன் பின்னணியிலேயே பயங்கரவாதி ஞானசாரவின் தூண்டுதலில் இவ்வன்முறை அரங்கேறியதும் அதன் போது பொலிசார் அதைத் தடுப்பதற்கான உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையென்பதும் சுட்டிக்காட்டது.
இது தொடர்பாக ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment