மஹிந்த ராஜபக்ஸ ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பில் போட்டியிட்டால், பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்துள்ளதாக அவரின் செயலாளர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.திசாநாயக்க இது தொடர்பில் இன்று மாலை Nf தெளிவூட்டினார். அவர் தெரிவித்ததாவது;
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பில் அவர் போட்டியிட்டால், பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பொதுத் தேர்தலில் களமிறங்குவார். ஏனெனில், அது அவரின் உரிமையாகும். அது அவரின் தந்தையின் கட்சி. அத்துடன் அவர் 63 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார். கொலை, இலஞ்சக் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது இல்லை.
என்றார்.
மேலும், மஹிந்த ராஜபக்ஸ ஶ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளராகப் போட்டியிட்டால் மாத்திரமே சந்திரிக்கா பண்டாரநாயக்க போட்டியிடுவார் எனவும் அவ்வாறு அல்லாது வேறு கட்சியுடன் இணைந்து அல்லது சிறிய குழுக்களுடன் இணைந்து போட்டியிட்டால் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.திசாநாயக்க தெரிவித்தார்.
Post a Comment