அரசியல் சம நிலை, அதிகாரக் கட்டுப்பாடு என பல்வேறு விடயங்களின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவை மீளவும் போட்டியிட அனுமதிப்பதற்கு மைத்ரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் அவர் பொய்யான தகவல்கள் மூலம் திசை திருப்பப் பட்டுள்ளார் என முன்னாள் சந்திரிக்கா பண்டாரநாயக்க வலியுறுத்தியதன் பின்னணியில் தனது முடிவை மீள் பரிசீலனை செய்ய மைத்ரி இணங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மஹிந்த போட்டியிட இணக்கம் தெரிவித்த போதிலும் அவரது பங்காளிகளான ஏனையோரின் நிலை குறித்து மைத்ரி இறுதி முடிவு எதுவும் தெரிவிக்கவில்லையென்பதால் மஹிந்த அணியும் தயார் நிலையிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊழல் மோசடி குற்றச்சாட்டுள்ள எவருக்கும் ஐமசுமு ஊடாகவோ சு.க ஊடாகவோ போட்டியிட அனுமதிக்க முடியாது என்றே மைத்ரி தொடர்ந்தும் தெரிவித்து வரும் நிலையில் மஹிந்த விவகாரத்தினால் அவர் மக்களின் வெறுப்பை சம்பாதித்திருப்பது எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணியின் முடிவை மீள் பரிசீலனை செய்ய இணங்கியிருப்பதாகவும் தகவல் அறியமுடிகிறது.
இந்நிலையில், சந்திரிக்கா மென்மையான போக்கிலேயே இம் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் மைத்ரியிடம் கூடுதல் அழுத்தத்தைப் பிரயோகிக்கவில்லையெனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர் ஒருவர் மூலம் தகவல் அறிய முடிகிறது. இன்று காலை, மைத்ரியின் முடிவு தந்திரோபாயமான காய் நகர்த்தல் என அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருந்தமையும் மைத்ரி – சந்திரிக்கா பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment