நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்ட விழ்த்து விட்டு வேடிக்கை பார்ப்பதற்கு அரசாங்கத்திற்கு அருகதையில்லை. ஆகையால், தொடர்ச்சியாக முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்தார்.
முன்னாள் ஆட்சியின் போதே முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக கூறி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய முஸ்லிம்களுக்கு, இறுதியில் ஏமாற்றமே பதிலாக கிடைத்துள்ளது. என வே நாட்டின் நலனுக்காக மஹிந்த ராஜபக்ஷவை மீளவும் பிரதமராக்க வேண்டும் எனவும் அவர் வேண்டினார்.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் Vi க்கு கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தின் போது சோல்பரி யாப்பில் சிறுபான்மையினத்தவர்களுக்கான விசேட ஏற்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதன்பிரகாரம் குறித்த யாப்பின் 29ஆவது உறுப்புரையில் சிறுபான்மை இனத்தவர்க ளுக்கு எதிரான மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது என்ற உரிமை வழங்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த சட்டம் 1972ஆம்ஆண்டு முதலாவது குடியரசு யாப்பில் முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டு, சிறுபான்மை இனத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதன்பின்பு 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பில் சிறுபான்மை இனத்தவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு விசேட ஏற்பாடுகள் கொண்டு வர ப்பட்டன. இந்நிலையில் தற்போது பொது பல சேனா என்ற இனவாத அமைப்பு தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையாக வன்முறைகளை கட்டவிழ்த்து வருகிறது. ஹலால் சின்னத்தை தடை செய்யகோரும் பொதுபலசேனா அமைப்பின் செயற்பாடுகள், மீளவும் ஹலால் சின்னத்திற்கு எதிராக திசைதிரும்பியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போதே முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும், குறித்த ஆட்சியை உடனடி யாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் சமூகத்தவர்களிடையே விழிப்புணர்வுகளை செய்து, முஸ்லிம்களின் ஆதரவுடன் மஹிந்தவின் ஆட்சியை தோற்கடித்தனர்.
இருந்த போதிலும் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவொரு அநியாயமும் இனிமேலும் இடம்பெறாது என்று நம்பியவர்களின் மன தில் எதிர்பாராத விதமாக நல்லாட்சியிலும் இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள் ளது. மரக்கிளையிலுள்ள இரண்டு சிட்டுக்குருவிக்கு ஆசைப்பட்டு பிடிக்க போய், கையிலிருந்த ஒரு சிட்டுக்குருவியையும் கைவிட்ட நிலைமைக்கு முஸ்லிம்களின் நிலைமை காணப்படுகிறது. இது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கருத்தும் பாராட்டத்தக்கது.
எவ்வாறாயினும் முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்ட நல்லாட்சியில் இனவாத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மஹிந்த ராஜபக் ஷவை மீளவும் பிரதமராக ஆட்சியில் அமர்த்த வேண்டும். அதன்பின்னரே நாட்டின் சமாதானம் ஏற் படுத்தப்படும்.
இந்நிலையில் முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளுக்கு தடையாக காணப்படும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடன டியாக கைது செய்ய வேண்டும் என்று கோ ரினார்.
Post a Comment