https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த ஏற்பாடு செய்யுமாறு, சத்தாருக்கு மஹிந்த உத்தரவு
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சகல மாவட்டங்களிலும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜப...

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சகல மாவட்டங்களிலும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டியில் வைத்து சுதந்திரக் கட்சி முக்கியஸ்தரும், மஹிந்த ராஜபக்ஸவின் அணியில் முக்கியத்துவம் பெற்று விளங்குபவருமான சத்தாருக்கே இந்த உத்தரவை மஹிந்த ராஜபக்ஸ வழங்கியுள்ளார். இதன்போது முன்னாள் பிரதியமைச்சர் அப்துல் காதரும் உடனிருந்துள்ளார்.

இதுகுறித்து சத்தார் கூறுகையில்,

மஹிந்த அணி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிகளவு முஸ்லிம்கள் என்னுடன் தொடர்கொண்டு வருகின்றனர். சட்டத்துறை சார்ந்தவர்கள், தொழில் அதிபர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட முஸ்லிம் தரப்பினர் மஹிந்த ராஜபக்ஸ அணியில் போட்டியிட இம்முறை விருப்பம் கொண்டுள்ளனர். அதற்காக என்னுடன் தினமும் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.  மக்கள் செல்வாக்குள்ள, மக்களுக்கு நேர்மையாக சேவை செய்யக்கூடியவர்களுக்கு அம்முறை மஹிந்த அணியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

தற்போதும் மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம்களுடன் ஆர்வத்துடன் செயற்படுகிறார். என்னை காணும் போதெல்லாம் ' ஏன் முஸ்லிம்கள் எனக்கு, இப்படிச் செய்தார்கள்' என கேட்கிறார். முஸ்லிம்களுக்கு தொடர்ந்தும் சேவை செய்ய தாம் காத்திருப்பதாகவும் கூறுகிறார். நல்லாட்சி என்றுகூறி பதவிக்கு வந்த இந்த அரசாங்கம் தொடர்பில் இந்நாட்டு முஸ்லிம்கள் ஏமாந்துவிட்டனர். 
நகர அபிவிருத்திக்கு பொறுப்பாக அமைச்சர் ஹக்கீம் இருக்கின்ற போதிலும் அவரால் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்திற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியவில்லை. றிசாத் பதியுதீன் மன்னார் முஸ்லிம்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை. பொதுபல சேனாவின் இனவாதச் செயற்பாடுகளுக்கு மைத்திரியோ ரணிலோ தடை போடவில்லை.

இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ஸவை நாட்டின் பிரதமராக்க இந்தநாட்டு மக்கள் தீர்மானித்துள்ளனர். இதில் முஸ்லிம்களும் பங்காளர்களாக இணைந்துகொள்ள வேண்டும். புலிப் பயங்கரவதத்தை ஒழித்து வடக்கு கிழக்கு மக்கள் உள்ளிட்ட சகலரும் நிம்மதியாக வாழச்செய்தவர் மஹிந்தவே ஆகும் எனவும் சத்தார் மேலும் தெரிவித்தார்.


Advertisement

Post a Comment

 
Top