https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: சீரழியும் முஸ்லீம் யுவதிகள் -
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
கொழும்பு சொகுசு பஸ்களில் நேரில் காணும் காட்சிகள் இதோ ! அண்மைக்காலமாக பல்வேறு சமூகப்புறழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இவை சிறுபான்மையின...


கொழும்பு சொகுசு பஸ்களில் நேரில் காணும் காட்சிகள் இதோ !
அண்மைக்காலமாக பல்வேறு சமூகப்புறழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இவை சிறுபான்மையின தமிழ், முஸ்லீம் இனங்களின் மத்தியிலேயே அதிகரித்த சதவீதத்தில் காணப்படுகிறது.
இதன் பின்னணி என்ன? இதை சமூக அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். சிறுபான்மையினரை இலக்கு வைத்து ஊக்கப்படுத்தப்படும் நடவடிக்கையென அரசியல்வாதிகள் பொதுவாக கூறுவிட்டு இருக்க முடியாது.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய தீபம் வாசகரான ஹசன் புஹாரி என்ற அன்பர் ஒரு சிறிய சம்பவத்தை எமக்கு அனுப்பியுள்ளார். குறைந்தபட்சம் பெற்றோராவது தமது பிள்ளைகளில் கவனம் செலுத்த இந்த சம்பவங்கள் பகிரப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது அனுபவம் கீழே.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி கொழும்பு சொகுசு பஸ்சில் செல்ல நேர்ந்தது. பஸ் வண்டிக்குள் ஏறிய போது தலையில் ஸ்காபை சுற்றி அணிந்திருந்த முஸ்லிம் யுவதி ஒருவர் யன்னலோரமாக அமர்ந்திருக்க அவருக்கு பக்கத்து இடம் காலியாக இருந்தது.
குறித்த யுவதிக்கு பின்னால் இருவர் அமரக்கூடிய இரண்டு ஆசனங்கள் காலியாக இருக்க, அதில் நான் போய் அவருக்கு பின்னல் யன்னலோரம் அமர்ந்து கொண்டேன்.
சிறிது நேரம் கழித்து லங்கா தீப பத்திரிகையுடன் பஸ்சில் ஏறிய ஒரு பெரும்பான்மை வாலிபர் எனக்கு முன்னால் இருந்த முஸ்லிம் யுவதியின் அருகில் அமர்ந்துகொண்டார். குறித்த வாலிபர் பெரும்பான்மை வாலிபர் என்பதை அவர் கட்டியிருந்த பிரித் நூலின் மூலம் நான் உறுதிபடுத்தி கொண்டேன்.
பயணம் தொடங்கி கடுகண்ணாவை பிரதேசத்தை பஸ்வண்டி அண்மித்த போது குறித்த பெரும்பான்மை வாலிபர் அந்த யுவதியுடன் பேச்சு கொடுக்க துவங்கினார். நான் சிறிது கண் அசந்து விழித்து பார்த்த போது கேகாலை நகரை பஸ் வண்டி அண்மித்து இருந்தது.
மட்டுமல்லாமல்முன்னாள் பார்த்த எனக்கு அதிர்ச்சியும் காத்திருந்தது. ஸ்காப்பால் தலையை சுற்றி இருந்த யுவதியின் ஸ்காப் அவரது கழுத்தை சுற்றி இருந்தது மட்டுமல்லாமல், அவர் அந்த பெரும்பான்மை நபரின் தோளில் சாய்ந்த வண்ணம் உறங்கிகொண்டிருந்தார்.
அத்தோடு நின்றுவிடாமல் இவர்களது சேட்டைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. மருதானையில் எனக்கு இறங்க வேண்டிய தேவை இருந்ததால் நான் அங்கு இறங்கிவிட்டேன் .
குறித்த இருவர் கொழும்பு புறக்கோட்டையில் ஜோடியாக இறங்கினார்களா அல்லது தனியாக பிரிந்து சென்று விட்டர்களா என்பது தெரியவில்லை …
பத்து வருடங்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய எனக்கு இந்த சம்பவம் பெறும் ஆச்சர்யமாக இருந்தது. குறித்த சம்பவத்தை நான் எனது மைத்துனருக்கு சொன்னபோது, அவர் இது போன்ற சம்வங்கள் எமது சமூகத்தில் சர்வசதாரனமான விடயமாகிவிட்டது
எனவும், அண்மையில் எமது ஊரில் அந்நிய ஆண்களுடன் எமது பெண்கள் தொடர்புவைத்து மாட்டிக்கொண்ட சில சம்பவங்களையும், அவை பள்ளிவாயல் பொலிஸ் விசாரணை வரை சென்ற சம்பவங்களையும் சொன்னார் .
பத்து வருடங்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய எனக்கோ அப்போது நாம் இருந்த எமது சமூக கட்டுப்பாடுகளுடன் ஒப்பிடும் போது இந்த சம்பவம் பெரும் ஆச்சர்யமாக இருந்தது.
இன்று இனவாதிகள் விடும் அறிக்கைகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை இது போன்ற சமூக சீர்கேடுகளுக்கு நாம் வழங்காமல் இருப்பது எமது சமூகத்தின் கிடைத்துள்ள சாபக்கேடாகும்.
எப்போது எமது சமூகம் விழித்து கொள்ளப்போகிறது என்ற ஆதங்கத்துடன் நான் குடியேறியுள்ள நாட்டிற்கு பயணமாகிறேன் …..

Advertisement

Post a Comment

 
Top