முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பற்ற சமூக உணர்வு
முஸ்லிம் பெற்றோரால் கைவிடப்பட்டு மீரிகம அம்பன மகா போதி சிறுவர் இல்லத்தில் 11 வயது வரை பௌத்த சூழலில் ஒரு முஸ்லிம் சிறுவன் முஹம்மது அயாஸ் வாழ்ந்து புகையிர விபத்தில் மரணிக்கும் வரை பார்த்து கொண்டு இருந்த அப்பிரதேச முஸ்லிம்களை எண்ணி வெட்க படுவதா அல்லது வேதனை படுவதா என தெரியாது உள்ளது.
நாட்டின் பல பாகங்களில் முஸ்லிம் அநாதை இல்லங்கள் இருந்த போதும் ஏன் அம்முஸ்லிம் சிறுவன் பௌத்த அனாதை இல்லத்தில் வாழ வேண்டும் என்ற வினாவுக்கு இலங்கையின் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது .
இம் முஸ்லிம் சிறுவனை பெற்று எடுத்த தாய் தந்தையரை இறுதிவரை கண்டு பிடிக்க முடியாது போனமை எமது முஸ்லிம் சமூகம் எவ்வாறு மார்க்கரீதியாகவும் சமுகரீதியாகவும் பின்னோக்கி பயணிக்கிறது என்பதுக்கு ஒரு சான்றாகும்.
அச்சிறுவன் மரணிக்கும் வரை தனது பெற்றோரை சந்திக்கும் பாக்கியத்தை பெறமுடியாது போனமை அச்சிறுவன் பெற்ற வரம் அல்ல அவனின் பெற்றோர் செய்த பாவம் ஆகும்.
.
எந்த பாவமும் அறியாது , உண்மையான மார்க்கம் எது என்று பகுப்பாய்வு செய்யும் அறிவினை பெறும் பருவ வயதை அடையும் முன் அச்சிறுவன் மரணித்துஇருப்பது ஒரு ஆறுதல் ஆன விடயம் . இருந்த போதிலும் அச்சிறுவன் மரணித்த பின் அப்பிரதேச முஸ்லிம் மக்கள் இஸ்லாமிய முறை படி முஸ்லிம் மைய வாடியில் நல்லடக்கம் செய்தது மேலும் ஒரு ஆறுதலை தருவதாக உள்ளது.
இருப்பினும் இச்சம்பவம் முஸ்லிம் சமூகத்திக்கு ஒரு வெட்க கேடான விடயம் என்பதுடன் எதிர்காலத்தில் இவ்வாறன நிகழ்வுகளில் இருந்து எமது சமூகத்தை பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் மார்க்க கடமை என்பது எனது கருத்தாகும்
Post a Comment