மஹிந்த ராஜபக்சவுக்கு சுதந்திரக் கட்சியூடாக தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப் போவதில்லையென்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதுடன் தம்மை சந்தித்த சிறு கட்சிகளிடம் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து சிறு கட்சிகள் அனைத்துமே பெரும்பாலும் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனவை ஆதரித்திருந்தன. இந்நிலையில் ஐமசுமுன்னணியின் மஹிந்த ஆதரவாளர்கள் அவரை மீண்டும் பதவியில் அமர்த்த முயற்சிக்கின்ற போதிலும் சுதந்திரக் கட்சிக்குள் அவ்வாறான ஒரு தீர்மானத்தை எட்ட முடியாத நிலையே நிலவுகிறது.
இதற்கென நியமிக்கப்பட்ட பிரத்யேக குழு நேற்றைய தினம் கூடி ஆராய்ந்த போதிலும் கூட தெளிவான முடிவொன்றை எட்ட முடியாது போயுள்ளமையும் மஹிந்தவின் நியமனத்திற்கு ஆதரவற்ற நிலையில் காணப்படுவதால் அவர் மாற்று வழியையே நாடுவார் எனவும் அரசியல் தகவல் மூலங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையிலேயே ஜனாதிபதி தனது முடிவில் தெளிவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment