ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் முன்னாள் ஜனாதிபதிக்கு பிரதமர் வேட்புரிமை வழங்க வேண்டாம் என தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடலின் போது வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவதற்கு பல்வேறு வகையில் ஆதரவு வழங்கிய பலர் இன்றைய சந்திப்பில் பங்கேற்றுள்னளர்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவதற்கு பல்வேறு வகையில் ஆதரவு வழங்கிய பலர் இன்றைய சந்திப்பில் பங்கேற்றுள்னளர்.
இதன்போது மஹிந்தவுக்கு பிரதமர் வேட்புரிமை வழங்கக்கூடாதென வலியுறுத்தியுள்ளதாக சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவடையாத வகையில் ஜனாதிபதி செயற்படுவார் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று மாலை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவதற்கு ஆதரவு வழங்கிய முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைக்கு இன்று மாலைக்குள் முடிவு கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment