https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: கோத்தபாய - ரிஸ்வி முப்தி இரகசிய உறவு, அரசாங்கம் உடனடி விசாரணை செய்ய வேண்டும்
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
கோத்தபாய - ரிஸ்வி முப்தி இரகசிய உறவு, அரசாங்கம் உடனடி விசாரணை செய்ய வேண்டும் இதுவரை வந்த ஸ்ரீ லங்கா ஜமியத்துல் உலமாவின் தலைவர்களில் மிகவும...


கோத்தபாய - ரிஸ்வி முப்தி இரகசிய உறவு, அரசாங்கம் உடனடி விசாரணை செய்ய வேண்டும்

இதுவரை வந்த ஸ்ரீ லங்கா ஜமியத்துல் உலமாவின் தலைவர்களில் மிகவும் மோசமான ஒரு முன்மாதிரியைக் காட்டி, அடாவடியாக் நடந்து கொண்ட ரிஸ்வி முப்தியின் இரகசிய வாழ்க்கை, இரகசிய தொடர்புகள், துரோகம், மோசடி, ஏமாற்று, சொத்து விபரம் குறித்து புதிய நல்லாட்சி அரசாங்கம் கட்டாயம் விசாரணை செய்ய வேண்டும்.

கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள், கொலைகள், ஊழல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கைதுசெய்துவரும் நல்லாட்சி அரசாங்கம், ரிஸ்வி முப்தி குறித்தும், இவர் கடந்த ஆட்சியில், கோத்தபாய உட்பட சிலருடன் மேற்கொண்ட இரகசிய சதிகள், மோசடிகள், துரோகங்கள் குறித்தும் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். (நீ.ம.வி.)

கண்டி மாவட்டத்தின் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ரிஸ்வி முப்தி, தப்லீக் ஜமாத்தின் ஒரு மத்தியநிலை மெளலவியாக இருந்து வந்தார்.

பொருளாதார நிலையில் சாதாரண மனிதனாக இருந்த இந்த முல்லா, இன்று கொழும்பின் மாபெரும் "இரகசிய கோடீஸ்வரர்களில்" ஒருவராக ஒரு சில வருடங்களில் திடீரென மாறிய வரலாறு என்ன?

உலமா சபைத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இவரின் செயல்பாடுகள் புது வடிவம் பெற்றன. உலமா சபை ஒரு வியாபாரக் காப்பரேட் கம்பனியாகவும், ஊழல் பெருநிறுவனமாகவும் மாற்றியமைக்கப் பட்டது. பணத்தை வங்கிக் கொண்டு ஹறாம்களைக் கூட ஹலால் என்று மாற்றினார்கள். (நீ.ம.வி.)

ஹலால் செர்டிபிக்கட் என்கின்ற ஒரு தந்திர வியாபார யுத்தியை மேற்கொண்ட ரிஸ்வி முப்தி, ஹராமான நிறுவனங்களுக்கும் ஹலால் யூனிட் உருவாக்கிக் கொடுத்து, முஸ்லிம்களின் பணத்தை கோடிக்கணக்கில் ஹரபாக்கி, தான் கோடிக் கணக்கில் கொமிஷன் அடித்துக் கொண்டார், பச்சை ஹராமாக. (நீ.ம.வி.)

2012 ஆம் ஆண்டு, மஹிந்த அரசைப் பாதுகாப்பதற்காக அகார் முஹம்மது உடன் ஜெனீவா சென்று, அரபு நாடுகளை காக்காய் பிடித்த ரிஸ்வி முப்தி, அதனை ஒரு ஆரம்பமாக வைத்து கோத்தபாயவுடன் தனது உறவை ஆரம்பித்தார். (ஜெனீவா சென்று வந்ததற்கு பெருமளவு பணம், 5 நட்சத்திர உல்லாச ஹோட்டல், பிஸ்னஸ் கிளாஸ் எயார் டிக்கட் என்பன அப்பொழுதே அன்பளிப்பாக வழங்கப் பட்டன)

அப்போதைய அரசு விரும்பியதற்கு ஏற்ப, கிண்ணியாவில் கண்ட பிறையை மறைத்து, முழு நாட்டு முஸ்லிம்களையும் ஹராத்தில் நோன்பு நோற்க நிர்ப்பந்தித்து பிறையை ஜுப்பவுக்குள் மறைத்ததன் மூலம், முழு நாட்டு முஸ்லிம்களுக்கும் மாபெரும் துரோகம் செய்து, கடந்த அரசின் இனவாதிகளுக்கு தனது விசுவாசத்தை நிரூபித்தார்.

இன்றைய திகதியில், கொழும்பு, களுத்துறை, கண்டி, ஏலபடகம, புத்தளம், வத்தளை, ஹற்றன், திருகோணமலை, வவுனியா, மெல்சிறிபுர போன்ற நாட்டின் பல பகுதிகளில் உள்ள மிகவும் பெறுமதியான சொத்துக்கள், வியாபர கட்டிடங்கள், காணிகள், தென்னந்தோட்டங்கள் என்பவற்றிற்கு சொந்தக்கரனாக ரிஸ்வி முப்தி எப்படி மாறினார்? இவற்றை வாங்கி, தனது பெயரிலும், தனது மகன்கள், மருமகள்கள் மற்றும் சில நெருங்கிய உறவினர்களின் பெயரிலும் எழுதி வைத்துள்ளார். இவை அனைத்தும் கடந்த மூன்று வருட காலப் பகுதியில் வாங்கப்பட்டவை ஆகும். கொழும்பில் மட்டும் இவருக்கு சொந்தமான 5 லக்சிறி வீடுகள், பில்டிங்குகள் என்பன மகன், மற்றும் சில உறவினர்களின் பெயரில் உள்ளன.

இவை அனைத்தையும் வாங்கும் அளவுக்கு பணம் எப்படி கிடைத்தது? இந்தப் பணங்களை பெற்றுக் கொள்வதற்கும், மோசடி செய்வதற்கும் முஸ்லிம் சமூகத்தை எப்படி அடகு வைத்தார், இவற்றில் கோத்தபாய எப்படி சம்மந்தப் படுகின்றார் என்கின்ற விடயங்களை அரசாங்கம் கட்டாயம் விசாரணை செய்ய வேண்டும். (நீ.ம.வி.)

சமூர்த்தி ஊழல், ரகர் அணித்தலைவராக வர இருந்த முஸ்லிம் வீரர் சாஜிதீனின் கொலை (நீ.ம.வி.) என்று எல்லா விடயங்களையும் விசாரணை செய்யும் நல்லாட்சி அரசாங்கம், ரிஸ்வி முப்தி குறித்தும், அவர் செய்த ஊழல்கள், துரோகங்கள், மோசடிகள், ஹலால் யூனிட் கணக்கு வழக்குகள், பிறை விவகாரம் குறித்தும் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும்.

(நீ.ம.வி.) = நீதி மன்ற விசாரணையில் உள்ள விடயங்கள், ஆகவே அவை குறித்த விபரங்களை பகிரங்கமாக வெளியிட முடியாது.

எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1

Advertisement

Post a Comment

 
Top