குவைத்தில் உள்ள சியா மசூதியில் நேற்று முன்தினம் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொழுகையின் போது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பலியாயினர். அவர்களில் 2 பேர் இந்தியர்கள் என இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் ரிஸ்வான் ஹூசைன் (31) உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்தவர். மற்றொருவர் அதே மாநிலத்தின் ஜலால்பூரை சேர்ந்த இப்னு அப்பாஸ் (25). இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தனர்.
பலியான இவர்கள் இருவரது உடல்களும் அவரது குடும்பத்தினரின் விருப்பப்படி ஈராக்கின் புனித நகரமான நஜாப்பில் அடக்கம் செய்யப்படுகிறது.
வெள்ளிக்கிழமை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 26 பேர் பலியாயினர். 227 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இந்தியர்களை அம்ரி மருத்துவமனையில் நேரடியாக சென்று குவைத்தின் இந்தியாவிற்கான தூதர் சுனில் ஜெயின் பார்வையிட்டார்.
குவைத்தில் எகிப்து மக்களுக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக சுமார் 8 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலும், தனியார் துறையில் கட்டுமான பணியாளர்களாகவும், தொழில்நுட்ப வல்லுனர்களாகவும், பொறியாளர்களாகவும், டாக்டர்களாகவும், சார்ட்டர்ட் அக்கவுண்டன்டுகளாகவும், ஐ.டி. நிபுணர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment