https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: கொடுங்கோள் மன்னன் மகிந்தவும்.. நயவஞ்சகன் மில்ஃபரும்... அம்பலமாகும் அந்தரங்கங்கள்..
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
கொடுங்கோள் மன்னன் மகிந்தவும்.. நயவஞ்சகன் மில்ஃபரும்... அம்பலமாகும் அந்தரங்கங்கள்.. -------------------------------------------------...

கொடுங்கோள் மன்னன் மகிந்தவும்..
நயவஞ்சகன் மில்ஃபரும்... அம்பலமாகும் அந்தரங்கங்கள்..
----------------------------------------------------------------------------------------


ஒரு வருடமாகிறது..
பேருவளை மக்களை இரத்தக் கண்ணிரில் மிதக்க வைத்த அந்த கொடூரமான நாட்கள்..
அந்த அப்பாவி மக்களின் கண்ணீரில் குளிர்காய்ந்த நம்பிக்கைத் துரோகி மில்பர் கபூர்..

ஒரு ஊரையே அழ வைத்து ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் கலங்கடித்த அந்த சம்பவத்தின் காரணகர்த்தா மகிந்த... அவன் பின்னால் தூபம் போட்டவன் இந்த மில்பர் கபூர்.

தீயைக் கொளுத்தியவனும் , கொளுத்தக் காரணமாய் இருந்தவனும் மறந்து விட்டார்கள்..
ஆனால் அந்த வேதனையால் இன்னும் அறாத துயரில் வெம்பியழும் பாதிக்கப்பட்ட மக்களும், அந்த துயரில் கை் கோர்த்த நம் முகநூல் போராளிகளும்... இன்று வரை அதற்கான காரணங்களை அலசி ஆராய்ந்த வண்ணமிருந்த வேளையில்.. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தரும் தகவல்கள் திரண்ட வண்ணமுள்ளது..

ஆதாரம் ஏதும் கையில் இல்லாமலே அன்று குரல் கொடுத்தோம்.. அனால் யாரும் நம்ப மறுததனர்..
இன்று அதற்கான ஆதாரங்கள் அப்பட்டமாக வெட்ட வௌிச்சமாகியுள்ள இந்த நிலையில்..  மக்கள் முன்னிலையில் ஆதாரத்தோடு முன் வைப்பதாவது..

நல்லவர்கள் போல் வேஷம் போட்ட அந்த முயல் தோல்  போர்த்திய முள்ளம்பன்றிகள்..

அதில் ஒரு மகா கேடு கெட்டவன்..முஸ்லிம் என்ற பெயர் தாங்கி.. நம்பிக்கைத் துரோகி.. ஞானசாரவின் பாதாளக் கோஷ்டியினருக்கு.. இரகசியமாக தகவல் கொடுத்து..  அந்த பௌத்த பித்தர்கள் பேருவளை -அளுத்கமை ஊர்களையே நெருப்புக் கண்ணீர் சிந்த வைத்தான்.. அதற்கு காரணமான கயவன் வேறு யாருமில்லை.... பேருவளை நகரசபை மேயர் மில்பர் கபூர் தான் அவன்.

பொது மக்கள் சார்பாக ஆரம்பம் குழுவினர் அவனிடம் ஒரு சில கேள்விகளை கேட்க விரும்புகின்றது...

01-முஸ்லிம் மக்களை இனவெறிக்கு உள்ளாக்கிய கோத்தபாய ராஜபக்ஷவை பேருவளைக்கு அழைத்து வரவேண்டிய தேவை உனக்கு ஏன் ஏற்ப்பட்டது??

பதில்:- அவர் தருவதாகக் கூறிய பணத்தையும் பொருளையும் மறைமுகமாக மக்கள் கண்களுக்குத் தெரியாமல் உன்னுடைய வீட்டுக்கு கொண்டுவருவதா உன்னுடைய நோக்கம்....???

02- அன்று அளுத்கம மக்கள் எத்தனை முறை இரத்தக் கண்னீர் வடித்திருப்பார்கள் அப்படி இருக்கும் போது கோத்தபாய ராஜபக்ஷவை வெற்றிக் களிப்பில் பால்சோறு சாப்பிட வருமாரு அழைக்க உன் ஈனப் புத்தி இடம் கொடுத்தது எப்படி?

03- உனது வீட்டுக் கலியாணத்திற்க்கு மகிந்த ராஜபக்ஷவை அழைத்து வரவேண்டிய அவசியம் ஏன் ஏற்ப்பட்டது..

04- அவனை அழைத்து வந்தது மட்டுமல்லாது பெண்கள் மத்தியில் அந்த நாயை உட்க்காரச் செய்து அழகுபார்க்க வேண்டிய நிலை ஏன் எற்ப்பட்டது.

05-பேருவளை மக்கள் அன்று துன்பப் பட்டபோது அவர்களுக்கு கொடுக்க உன்னிடம் இல்லாத பணம் உன்னுடைய வீட்டுக் கல்யாணம் நாடாத்துவதற்க்கு , இத்தனை விதம் விதமான ஆடை ஆபரணங்கள் எங்கிருந்து வந்தது...??? அவை யாவும் பொது மக்களின் இரத்தக் கண்ணீரில் கிடைத்த கறுப்புப் பணம் என்பதை மறுப்பாயா?

இத்தனை வினாக்களுக்கும் அனிடம் இருக்கும் ஒரே பதில் இதுதான் பாவப்பட்ட மக்களை ஏமற்றி குளிர் காய்வதுதான் இந்த நயவஞ்சகன் இன்று சமூக சேவை என்ற பெயரில் பல சேவைகளை மக்களுக்காக செய்து வருகின்றதாக எமக்குத் தகவள்கள் கிடைத்திருக்கின்றது .

மக்களே ...!!|
நீங்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய காலம் இது.இப்படியான அக்கிரமக் காரர்களை சமுதாயத்தை விட்டும் விரட்டியடியுங்கள்..

அன்று பேருவளை அளுத்கமை மக்களை பார்த்து உலகமே குரல் கொடுத்தது.அனைத்து முஸ்லிம்களும் கலங்கி நின்றனர்..

தன்னால் இயன்றதை பணமாகவோ பொருளாகவோ கொடுத்தனுப்பி முழு இலங்கை மக்களும் பங்கெடுத்தனர் அந்த துயரத்தில்..

ஆனால் அந்த இன்னல்களில்.. இக்கட்டான நிலையில்.. இந்த பேருவளை நகரபிதா மில்பரின் பணம் வங்கியில் அடைக்கப்பட்ட வண்ணம்..தன் தம்பியின் திருமணத்தை உலகம் பாராட்டும் ஒரு களியாட்ட நிகழ்வாக்க கனவு கண்ட வண்ணம்..

நாம் பார்த்த அளவிற்கு புருணை சுல்தான் வீட்டு கல்யாத்திற்கு நிகரான ஒரு கலியாட்டமாக நடைபெற்றிருக்கிறது இவன் வீட்டு திருமணம்.. 

இதுவெல்லாம் பொதுமக்களின் கண்ணீரில் சம்பாதித்த பாவப்பட்ட கறுப்புப் பணங்கள்..
நிச்சயமாக இதற்கெல்லாம் அல்லாஹ்வுக்கு இவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும்.

அன்பான சகோதர சகோதரிகளே,....

எங்களுக்கும் இந்த மில்பர் என்ற நபருக்கும் எந்த சொந்த பிரச்சினைகளோ குடும்பப் பகைகளோ கிடையாது.மொத்தத்தில் நான் யார் என்று அவருக்கும் தெரியாது.ஆனால் பொது மக்கள் நன்மை கருதி.. இஸ்லாமிய உறவுகளின் நலன் கருதி.. இந்த தகவல்களை திரட்டி உண்மையை உரக்கக் கூறுகின்றோம்..

நம்பாதீர்கள்.. இப்படியான நயவஞ்சகர்களை இனியும் ஆட்சியில் பீடமேற்றி தகுதிகளை கொடுத்து எங்கள் இஸ்லாமிய மக்களின் வீழ்ச்சிக்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள் என்பதே எம் நிறைவான வேண்டுகோள்..

அல்லாஹ் இப்படியான தீய சக்திகளிடமிருந்து எங்கள் முஸ்லிம் மக்களை பாதுகாத்தருள் புரிவானானக...!!

இந்தக் கட்டுரையை எழுதும் எனக்கும் அந்த கபூருக்கும் எந்த விதக் குடும்பப் பிரச்சினையோ அல்லது குடும்பத் தகராரோ இல்லை அப்படி இருந்தால் நான் இந்தக் கட்டுறையை எழுதியிருக்க மாட்டேன் என்பதை நான் உங்களிடம் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.....

எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1

Advertisement

Post a Comment

 
Top