https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: பொது மக்களை கொன்று அராஜகங்களை அரங்கேற்றும் சந்ததிகளே !
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இவன் யார் என்று தெரியுமா ? எப்படி பட்ட அரசன் என்று தெரியுமா ? இவன் படை பலம் உங்களுக்கு தெரியுமா? இ...


நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
இவன் யார் என்று தெரியுமா ?
எப்படி பட்ட அரசன் என்று தெரியுமா ?
இவன் படை பலம் உங்களுக்கு தெரியுமா?

இவன்தான் பிர்அவுன் எகிப்துநாட்டின்
கொடுங்கோல் மன்னன் இவனுடைய அராஜகங்கள் கொஞ்ஜம் நெஞ்சம் அல்ல இன்றைய உலகில் கொல்லப்படும் மக்களை விட இவனாட்சியில்
இவனால் அழிந்தது எண்ணமுடியாத
அளவே சிறு குழந்தை முதல் பெரியவர்
வரை ஆண் மக்கள் அனைவரையும் கொன்று விடுவான்.

கர்ப்பினி பெண்கள் கூட மறைந்து வாழும்
அளவிற்கு இவன் கொடுமை தாண்டவம் ஆடிய காலம் தான் .. " இறைவன் நானே என்றும் தன்னைவிட அந்தஸ்தில் உயர்ந்தவர் எவருமில்லை என்றும் மனித இனம் முழுவதும் தன் அடிமை" என்றும் கர்வம் கொண்டவன் .

"நான்தான் எகிப்து வாழ் மக்களின் ரட்சகன் என்றும் நைல் நதி கூட என் கட்டளை படிதான் ஓடுகிறது நான் நினைத்தால் நைல் நதியின் கதவுகளை திறந்து விடுவேன் மூடவும் செய்வேன் நானே கடவுளும் கூட"என்று இருமாப்பும் கொண்டிருந்தவன் .

அவன் ஆட்சி அடக்கு முறையில் அவன்
ஒருகுறையும் வைத்தில்லை எப்படி எல்லாம் அனியாயம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து முடித்தான் .
அராஜகத்திற்கும் அழிவுண்டு என்பதை அவன் மறந்தான் கடலில் மூழ்கி மரணவேளையில் தண்னை மன்னிக்கும் படி இறைவனிடம் கெஞ்சினான் ..

தன்னை இறைவன் மன்னிக்க அவன் ஒர்
இறை கொள்கையை ஏற்றுக் கொள்கிறான்
தனது பாவங்களை மன்னிக்கவேண்டி பிராத்திற்கின்றான் ..
இப்போது தானா நம்புவாய்? குழப்பம்
செய்பவனாக இருந்தாய் : இதற்கு முன் பாவம் செய்தாய்:
-அல்குர்ஆன் 10 :92

'உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக
இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் என்று கூறினோம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்:-
(அல்குர் ஆன் 10:92)

அநியாயக்காரர்களின் முடிவு இவ்வாறுதான் இருக்கும் என்பதை உலகுக்கு உணர்த்துவதற்காக
ஃபிர்அவுனின் உடலை பாதுகாப்பேன்
என்று இறைவன் கூறுகிறான். இவ்வளவு அநியாயக் காரனின்வரலாறு உங்களுக்கு ஒரு சான்றே அமைதியை உலகில் கொண்டு வாருங்கள் அக்கிரமத்தில் ஆடியவர்கள் ஆடிப்போன வரலாறு அன்று மட்டுமல்ல இன்றும்
சரித்திரத்தில் எழுதப்பட காத்திருக்கின்றது காலத்தின் பதிலை எதிர்பார்த்து ....!

எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1

Advertisement

Post a Comment

 
Top