
இலங்கை கிரிக்கெட் அணியே 2015 உலகக்கோப்பையை மறந்துவிட்டு நாட்டுக்கு திரும்பப்போகின்றது. ஆனால் இந்த வீடியோ விவகாரம் இன்னும் முடிந்ததாக தெரியவில்லை.
அந்த பெண்ணின் ஆடியோ record வெளியானதில் இருந்து எரிகின்ற வீட்டில் பிடுங்குவது வரைக்கும் லாபம் என்பது போல் அந்த பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றாள்
அந்த பெண்ணின் ஆடியோ record ஐ கேட்டு அதற்கு ஆதரவாக அந்த பெண்ணுக்கு பண உதவிகளை செய்யவும், அந்த பெண்ணை திருமணம் செய்யவும் அநியாயத்திற்கு அப்பாவியாக ஒரு கூட்டம்.
(இவர்கள் எந்த நோக்கத்தில் இதற்கு தயாரானார்கள் என்று அல்லாஹ் அறிவான்.) அந்த பெண்ணின் ஆடியோ record ஐ கேட்டு, அதை நம்பி இவர்களின் வேலை வெட்டிகலையெல்லாம் விட்டு விட்டு அந்த faiz என்பவரை தேடிப்பிடித்து கொலை செய்யும் நோக்கில் இன்னொரு கூட்டம்.
அந்த faiz என்பவருக்கு எதிராக comment களை போட மற்றுமொரு முகநூல் முஜாஹிதீன் கூட்டம். அந்த இரண்டு போரையும் (faiz & fara) வைத்து அரசியல் லாபம் பெற மற்றுமொரு கூட்டம்.
இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் நமக்கு எதுக்கு வம்பு என்று ஒரு கூட்டம். (உலமா சபை உட்பட)
இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர சமூக அக்கறை கொண்ட சிலர் போராடி உண்மையை நிரூபித்தனர். இந்த உண்மை தெரிந்ததில் இருந்து பலர் சமூக வலையத்தலங்களில் இன்னும் இந்த வீடியோ சம்மந்தமான பதிவுகளை இட்ட வண்ணமே காணப்படுகின்றது.
இதை தண்டிக்க வேண்டும். இதற்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று. இதனால் முஸ்லிம் சமூகத்திற்கே அவமானம் என்பதாக. இந்த வீடியோ வில் சம்மந்தப்பட்ட பெண்ணின் ஆடியோ irecord இணை கேட்டு அதை வைத்து எமது சமூகம் விமர்சனம் செய்யத்தொடங்கிய பிறகு தான் இந்த வீடியோ வில் இருக்கும் இருவரும் இலங்கையர் என்பதும், இருவரும் முஸ்லிம்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
அது வரை அந்த வீடியோ சம்மந்தப்பட்டவர்களை தெரிந்தவர்கள் மாத்திரமே அறிந்திருந்தனர். அத்தோடு இந்த வீடியோ தான் உலகில் முதல் வீடியோ அல்ல. இதற்கு முன்னரும் ஏராளமான முஸ்லிம் வீடியோகள் ஏனைய நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் சிலரால் வெளியிடப்பட்டே இருந்தது.
ஆகவே இந்த விடயம் ஒன்றும் உலகிற்கு புதிதல்ல. அத்தோடு இவர்கள் செய்தது மிகப்பெரிய பாவம் என்று சமூகத்தில் கண்மூடித்தனமாக செயல்படும் சிலரின் விமர்சனம். காரணம் ஒரு ஆணினதும் ஒரு பெண்ணினதும் நிர்வான வீடியோ என்பதால். இவர்கள் செய்ததை விட சமூகத்தில் இருப்பவர்கள் ஏராளமான பாவச்செயல்களிலும் சமூகத்தை இழிவுபடுத்தும் செயல்களிலும் ஈடு பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கையில் ஏராளமான பாவச்செயல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இதே நேரத்தில் இந்த இருவரைப்பற்றி அல்லாஹ் மாத்திரமே அறிவான். ஆகவே அவர்கள் இருவரையும் பற்றி புறம் பேசாதீர்கள். அது மிகப்பெரிய பாவம் என்று சிலர் கருத்து தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
அது ஒரு நல்ல விடயம். ஆனால் இது மட்டுமல்ல பிறரைப்பற்றி பேசப்படுகிறது. அடுத்த வீட்டுக்காரர், ஊர் காரர், முஸ்லிம் அரசியல் வாதிகள் என பலரும் பலரைப்பற்றி புறம் பேசிக்கொண்டே இருக்கின்றனர். பலரும் உண்மை நிலைகளை அறியாமல் பிறரைப்பற்றி திட்டிக்கொண்டும், கெட்ட எண்ணங்களை தெரிவித்துக்கொண்டும் இருக்கின்றனர்.
இதுவும் அதே அளவான பாவத்தை தேடித்தரும் என்பதில் சந்தேகமில்லை. எம்மில் பலர் ராமலானைத்தவிற மற்ற நாட்களில் fajr உடைய தொழுகையை தொழாத வண்ணமே நாட்களை ஆரம்பிக்கின்றனர்.
அத்தோடு எமது வியாபாரங்களில் ஏராளமான கலப்படங்களும் பொய்களும் பித்தலாட்டங்களும் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. பொய் என்பது ஒரு மன்னிக்க முடியாத பாவம் என்று ஹதீஸ்களிலும் உலமாக்களும் தெரிவிக்கின்றனர். இதனால் சம்பாரிப்பவை அனைத்தும் ஹராமாகவே கொள்ளப்படும். அதுமட்டுமல்லாது நமது வீடுகள், ஆடை அலங்காரங்கள், திருமண நிகழ்வுகள், பொழுதுபோக்குகள் என்பவற்றில் கூடுதலாக பாவச்செயல்கள் செய்யப்பட்ட வண்ணமே இருக்கின்றது.
நமது ஐந்காலத்தொளுகைகளை இந்த சிறு சிறு விடயங்களுக்காக கலா செய்கின்றனர். அத்தோடு இளைஞர்களை எடுத்துக்கொண்டால் போதைபோருட்கள் உபயோகிப்பது, மது அருந்துவது, சினிமா படங்கள் பார்ப்பது, ஆபாச படங்கள் பார்ப்பது, பெண்களோடு உறவு வைத்துக்கொள்வது, இது போன்ற பல பாவச்செயல்களில் ஈடுபட்ட வண்ணமே இருக்கின்றனர்.
இஸ்லாமிய பெண்களும் இவைகள் பலதில் ஈடுபடுகின்றனர். இன்றைக்கு இசை, சினிமா என்பன சர்வ சாதாரணமாகிவிட்டது. அதை கேட்காமல், பார்க்காமல் பொழுதைக்கழிக்க மடியாமளிருக்கின்றது. இதற்கு ஒரு வகையில் இவர்களது பெற்றோர்களும் காரணமாகும். பிள்ளைகளை பெற்றால் போதும் சுவர்க்கம் கிடைத்து விடும் என்பது பல பெற்றோரின் எண்ணம்.
பிள்ளைகள் அல்லாஹ்வால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அமானிதம் என்பதை பலர் மறந்தே விட்டனர். தற்காலத்தில் பெற்றோர்கள் பிள்ளை பெற்றால் அந்த பிள்ளைக்கு அகீக்கா கொடுப்பதை மறந்து விட்டு நான் பிள்ளை பெற்று விட்டேன் என்ற பெருமைக்காக ஊரிலுள்ளவர்களைஎல்லாம் அழைத்து சாப்பாடு போடுகின்றனர்.
பிறகு தமது பிள்ளை எல்லோர் முன்னிலும் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற பெருமைக்காக அன்னிய பாடசாலைகளில் சேர்க்கின்றனர். பிறகு மார்க்க அறிவே இல்லாமல் அவர்கள் வளர்கின்றனர். நிச்சியமாக பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பற்றி மறுமையில் பதில் கூறியே ஆகவேண்டும்.
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் நாளை மறுமையில் இந்த பிள்ளைகளால் பெற்றோர்கள் நரகிற்கு செல்ல நேரிடலாம். . அது மாத்திரமின்றி நமது முஸ்லிம் பாடசாலைகளிலே மாணவர்களுக்கு மார்க்கத்தை சரியாக பின்பற்ற அனுமதிக்க மாட்டார்கள்.
தற்காலத்தில் முஸ்லிம் சமூகம் இவ்வாறு சென்று கொண்டிருக்கின்றது. அந்த நிர்வான வீடியோ அவர்கள் இருவராலும் வெளியிடப்பட்டிருக்கின்றது என்பதே எமது சமூகத்தினர் அந்த பாலியல் இணையத்தலத்திட்கு சென்று பார்த்ததால் தானே தெரியும். அதை பார்ப்பதும் ஒரு மிகப்பெரிய பாவமாகும். நாம் உத்தமர்கள் என்று கூறிக்கொள்ள எமது வாழ்க்கை இன்னும் முடியவில்லை. எதிகாலத்தில் எமது நிலை என்னவென்று அல்லாஹ்வே அறிவான்.
அல்லாஹ் காப்பாற்ற வேண்டும், நாம் இதை விட பெரிய பாவத்தை செய்யும் சூழ்நிலைக்கு ஆளாகலாம். அல்லாஹ் பாதுகாப்பானாக. ஆகவே இவ்வனைத்தையும் வைத்து பார்த்தால் பாவத்தில் மூழ்கியிருக்கும் எங்களுக்கு அந்த நிர்வான வீடியோ வுடன் சம்மந்தப்பட்டவர்களை தண்டிக்கும் தகுதி எமக்கு அறவே இல்லை. அவ்விருவரும் அல்லாஹ்வுக்கு பயந்தவர்களாக இருந்தால் அல்லாஹ்விடம் தவ்பா செய்து மீளுவார்கள். இல்லையென்றால் அல்லாஹ் மறுமையில் அதற்கான கூலியை கொடுப்பான்.
சமூகம் என்பது ஒவ்வொரு தனி மனிதனாலும் உருவாக்கப்படுவது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் திருந்தினால் சமூகம் தானாக திருந்தும். நாம் அனைவரும் நமது பாவங்களுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்து மீளுவோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.
Post a Comment