
முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கவனத்திற்கு
இன்று முழு நாடும் புது யுகத்தை நோக்கி பயணிக்கும் வேளையில் முஸ்லிம்களும் அதன் பங்காளிகளாக உணர்ந்துள்ளனர்.
இக்கால கட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பின்வரும் விடயங்களை கருத்தில் கொண்டு செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என கருதுகிறேன்.
1. பதவி எனும் அமானிதத்தை வழங்கிய அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ள வேண்டும்.
2. முஸ்லிம்களால்தான் மைத்திரி ஜனாதிபதியானார் என்று மேடைகளில் வீராப்பு பேசி எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றக் கூடாது.
3. இனவாதம் பேசி சுயநலன் தேடும் அரசியல் கலாசாரத்தை மீண்டும் ஆரம்பித்து முஸ்லிம்களை நரிகளாகப் பார்க்கும் பேரின மக்களிடம் அதை நிரூபிக்கும் வகையில் நடக்கக் கூடாது.
4. யுத்த வெற்றிக்கு காரணமானவர் என பெரும்பான்மையினரால் போற்றப்படும் மஹிந்த ராஜபக்ஷவை இழிவுபடுத்தி பேசக் கூடாது.
5. பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் இடங்களில் உரையாற்றும்போது சிறுபான்மையாகவும் முஸ்லிம்கள் நாடுமுழுவதும் வாழ்கின்றார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
6. இனவாத அரசியல் கலாசாரத்திலிருந்து மீண்டு தேசிய அரசியலில் முஸ்லிம்கள் பிரதான பாத்திரதாரிகளாக மாற வேண்டும்.
7. முஸ்லிம்கள் இந்த தேர்தலில் உங்களுக்காக வாக்களிக்கவில்லை என்பது திண்ணம். எனவே அவர்களது வாக்கு வங்கிகளை இனிமேலும் உங்களால் நிருவகிக்க முடியும் என பகல் கனவு காணாதீர்கள்.
8. முக்கிய அமைச்சுப் பதவிகளுக்காக போட்டி போடாமல், நாட்டினதும், முஸ்லிம்களின் முக்கியமான பிரச்சனைகளுக்காகவும் தீர்வுகளை முன்வைத்தல்.
9. சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், ஆரோக்கியம், ஊடகம் போன்றவற்றை மேம்படுத்த முன்னுரிமை வழங்குதல்.
10. முஸ்லிம் சமூகத்தை, அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை பிரதேசவாரியாக, கட்சிவாரியாக இன்னும் பல காரணக்களுக்காக பிரித்தாளும் சுயநல தந்திரோபாயம் கைவிடப்பட வேண்டும். இதனால்தான் கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியாக பலமின்றி பல்வேறு உரிமைகளை இழந்தது என்பதை நன் கூறி நீங்கள் விளங்க வேண்டியதில்லை.
11. உரிமைகளை பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் (அளுத்கம நிகழ்வு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட நேரம் நோன்பு திறக்க சென்றது போன்று) களத்துக்கு வெளியில் மக்களிடம் வந்து இனவாதம் பேசும் கீழ்த்தரமான செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
12. உமர் (ரலி)யின் நீதியான ஆட்சியை எமது சமூகம் அந்நியவர்களிடம் (உ+ம்: அநுர குமார) கண்டுகொள்ள வேண்டிய வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலை மாறி எமது உயரிய தீனை எத்திவைக்கும் பிரதான இடமாக பாராளுமன்றம் திகழ வேண்டும்.
13. முழு நாட்டின் சக்கரம் திரும்பிய திசையில் நாமும் திரும்பினோம் என்றில்லாமல் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள நல்லாட்சியை இந் நாட்டில் நிலை நிறுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.
Post a Comment