பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் உள்ளடக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகளை அகற்றி விடுமாறு இலங்கையின் கத்தோலிக்க சபை அதிகாரிகளிடம் கோரியுள்ளது.
இந்தநிலையில் பாப்பரசரின் இலங்கை விஜயம் ரத்தாகும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட கருத்தையும் சபை மறுத்துள்ளது.
பாப்பரசரின் விஜயத்துக்கு முன்னதாகவே தேர்தல் நடைபெறுவதால் அவரின் விஜயத்துக்கு பாதிப்பு இல்லை என்றும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே பாப்பரசரின் விஜயம் 2015 ஜனவரி 13 முதல் 15வரையில் திட்டமிட்டப்படி இடம்பெறும் என்றும் சபை தெரிவித்துள்ளது.
Post a Comment