விஞ்ஞானத்தின் நாளுக்கு நாள் வளர்ச்சியால் 'நேற்றைய புதுசு இன்றைய பழசு' என்று புது அகராதி உருவாகிவிடும் போல. ஸ்மார்ட் போன்கள் மூலமாக செல்ஃபி போட்டோக்களை எடுத்து மார்தட்டிக்கொண்டதெல்லாம் மலையேறிவிட்டது.
-ந.ஆஷிகா
இப்போது செல்ஃபி வீடியோ எடுக்கும் வண்ணம் புதிதாக ஃப்லிம்போ ஐபோன் வந்துவிட்டது. நாம் செய்யும் வேலைகளை நாமாகவே வீடியோவும் எடுக்கமுடியும். அந்த வகையில் இது ஒரு மினி ரோபோ போட்டோகிராபர் என்றே ஜயமின்றி சொல்லலாம். ஏனென்றால் நாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இந்த கேமிரா போனை பொருத்தி வைத்துவிட்டால் நாம் எங்கு சென்றாலும் அதற்கேற்ப இந்த கேமிரா போனும் திரும்பி திரும்பி நம்மை அழகாய் வீடியோ காட்சியாக பதிவு செய்துவிடுகிறது.
லைட் வெயிட் என்பதால் எளிதாக கொண்டு செல்லவும் முடியும். இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட் போன் விரைவிலேயே விற்பனைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. விலை குறைந்தது 150 டாலர் வரை இருக்கலாம் என்கிறார்கள். அதுசரி நாளுக்கு நாள் நவீனமயமாகிவரும் இளசுகளுக்கு விலை ஒரு பொருட்டா என்ன...?
Post a Comment