smile picker smile picker Author
Title: தூக்க மயக்கத்தால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மொறட்டுவ பல்கலை மாணவர்கள் புதிய பொறிமுறை
Author: smile picker
Rating 5 of 5 Des:
தூக்க மயக்கத்தினால் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கு மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கணனி மற்றும் பொறியியல் பீட மாணவர்கள் புதிய இலத்திரனியல் ப...
தூக்க மயக்கத்தினால் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கு மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கணனி மற்றும் பொறியியல் பீட மாணவர்கள் புதிய இலத்திரனியல் பொறிமுறையொன்றை உருவாக்கியுள்ளனர்.
வெளிநாடுகள் பலவற்றில் இவ்வாறான இலத்திரனியல் உபகரணங்கள் இருக்கின்றன. எனினும் அவற்றை சாரதிகள் தலையில் அணிந்து கொள்ள வேண்டும். சாரதிகள் உபகரணத்தை அணிவது இந்த தொழிநுட்பத்தில் காணப்படும் குறைப்பாடாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய இலத்திரனியல் பொறிமுறையின்படி கமெரா வாகனத்தின் சாரதி இருக்கைக்கு முன் பொருத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தூக்கமயக்கம் ஏற்படும் போது கண் இமை எத்தனை முறை மூடித் திறக்கின்றன, தூக்க மயக்கத்தில் சாயும் சந்தர்ப்பங்கள் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சாரதிக்கு சமிக்ஞைகள் மூலம் உணர்த்தப்படும் வகையில் இந்த பொறிமுறையை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

Advertisement

Post a Comment

 
Top