என் மகன் சவுதியில கைநிறைய சம்பாதிக்கிறான், என் மகன் டுபாய்ல ஆபிசில ஏசி றும்ல வேலை பார்க்கிறான், அவனுக்கு கார் கொடுத்திருக்காங்களாம், நல்ல உத்தியோகத்தில இருக்கானாம்.
என்று...அக்கம் பக்கத்தவர்களிடம் பெருமையடித்துக் கொண்டிருப்பார்கள் வெளிநாடுகளில் இருக்கும் ஒவ்வொருவரது பெற்றோர்களும்.
அப்படியே மகன் அனுப்பும் பணத்தைக் கொண்டு வரவுக்கு மீறிய செலவு செய்து பந்தா வாழ்க்கை வாழ்வார்கள்.
அப்படியே மகன் அனுப்பும் பணத்தைக் கொண்டு வரவுக்கு மீறிய செலவு செய்து பந்தா வாழ்க்கை வாழ்வார்கள்.
ஆனால் வெளிநாட்டில் வேலை செய்யும் நாங்கள் எத்தனை இழப்புக்களை இழந்திருக்கிறோம், எத்தனை சந்தோசங்களைத் தொலைத்திருக்கிறோம், எத்தனை பேருக்கு அடிமையாக வேலை செய்திருக்கிறோம், எத்தனை தீபாவளி கொண்டாட்டத்தை இழந்திருக்கிறோம், எத்தனை றமழான் பண்டிகைகளை இழந்திருக்கிறோம், போதாக்குறைக்கு எத்தனை மூட்டைக் கடிகளுக்கு ஆளாகி இருக்கின்றோம்.
என்பதை எல்லாம் மறைத்து..நான் நல்லா இருக்கன் உம்மா, நான் சந்தோசமாக இருக்கன் வாப்பா, வேலை கஷ்டம் இல்லம்மா என்று கூறிக் கொண்டுதான் பணம் அனுப்புகிறோம் என்று எத்தனை பெற்றோருக்குத் தெரியும்...????
இந்தக் கவிதையைக் கேளுங்கள் உங்களுக்கே புரியும். இது எனது வரிகளில் மற்றும் குரலில் உருவான கவிதை பிடித்திருந்தால் செயார் செய்யுங்கள்.
(மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்)
Post a Comment